வெகு நாட்கள் கழித்து ஓப்போ நிறுவனத்திடம் இருந்து புதிதாக ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இம்முறை ஸ்லிம்மான டிசைனில் ஓப்போ A1 ப்ரோ ஸ்மார்ட்போனை டீஸ் செய்துள்ளது. இதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கைக்கு அடக்கமாக மெல்லிதான, எடை குறைவான ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்வதில் முன்னனி நிறுவனம் ஓப்போ ஆகும். இந்நிறுவனம் தற்போது வரும் நவம்பர் 16 ஆம் தேதி ஓப்போ ஏ1 ப்ரோ என்ற 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. 6.7 இன்ச் திரை அளவுடன், 120Hz வெர்ரெஷ் ரேட்டுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.
ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வளைந்த முனை டிசைன் ஓப்போ ஏ1 ப்ரோ ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் Chin அளவு வெறும் 2.3mm மட்டுமே உள்ளது. ஸ்னாப்டிராகன் 695 SoC சிப் பிராசசர், 108 மெகா பிக்சல் கேமரா சென்சார், 67W ஃபாஸ்ட் சார்ஜ், திரையிலேயே ஆப்டிக்கல் விரல் ரேகை சென்சார் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
undefined
இதற்கு முன்பு ஓப்போ ஏ98 என்ற பெயரில் ஸ்மார்ட்போன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாடலின் பெயர் ஏ1 ப்ரோ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் நிலையில், இந்தியாவில் இது எப்போது வரும் என்று விரைவில் தெரியவரும்.
Google Pixel 7a விரைவில் அறிமுகம்! எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.
OPPO A1 Pro ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: