Flipkart Offer: இன்றே கடைசி! குறைந்த விலையில் பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள்!!

By Dinesh TG  |  First Published Nov 14, 2022, 4:58 PM IST

Flipkart தளத்தில் Flipkart Grand Home Appliances Sale என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று நவம்பர் 14 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதில் 15 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


கடந்த மாதம் பிளிப்கார்ட்டில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்றது. அதன்பிறகு வெவ்வேறு பெயர்களில் சில ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தற்போது கிராண்ட் ஹோம் அப்ளையன்ஸ் சேல் என்ற ஆஃபர் உள்ளது. இது கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றோடு முடிகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளியில் வழங்கப்பட்ட ஆஃபரைக் காட்டிலும் தற்போது உள்ள ஆஃபர் பெரிய அளவில் இல்லை. இருப்பினும் வழக்கமான நாட்களை விட ஓரளவு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி ஆஃபரை தவறவிட்டவர்கள், டிவி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

Samsung HD Tizen TV with 2022 Model

சாம்சங் நிறுவனத்தின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 18,900 ஆகும். இது தற்போது ஆஃபரில் 13,490 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆக்ஸிஸ் வங்கியின் ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது வெறும் 11,000 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவியில் டைசன் இயங்குதளத்துடன், 50Hz ரெவ்ரெஷ் ரேட் உள்ளது. நெட்பிலிக்ஸ், பிரைம் வீடியோ இன்னும் பல செயலிகள் உள்ளன.

Realme HD Ready LED Smart Android TV

ரியல்மி தரப்பில் ஒரு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வருகிறது. இதன் அசல் விலை 17,999 ரூபாய். இதனை ரூ.13,499க்கு ஆஃபரில் வழங்கப்பட்டுள்ளது. HDFC வங்கி கார்டு மூலம் 10% உடனடி தள்ளுபடி, அதிகபட்சம் ரூ.1250 வரையில் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பயன்படுத்தினால் ரியல்மி டிவி இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன், 60Hz வெர்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதிலும் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ இன்னும் பல செயலிகள் உள்ளன. 

Google Pixel 7a விரைவில் அறிமுகம்! எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.

LG HD Ready LED Smart WebOS TV

டிவி எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் பல காலமாக ஜாம்பவனாக இருப்பது LG ஆகும். இந்நிறுவனத்தின் 32 இன்ச் ஸ்மார்ட் வெப் ஓஎஸ் டிவி தற்போது 13,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வங்கிக் கார்டுகளுக்கான ஆஃபர் ஆகியவற்றைப் பயன்படுத்தி இன்னும் நல்ல விலையில் வாங்க முடியும். இதில் வெப்ஓஎஸ் தளத்தில் இயங்குகிறது. 

Mi 5A HD Ready LED Smart Android TV (2022 Model)

Mi நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி Mi 5A ஆகும். இதன் அசல் விலை 24,999 ரூபாய் என்றும்,. தற்போது ஆஃபரில் 13,999 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது வெறும் 11,000 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன், 60Hz ரெவ்ரெஷ் ரேட் உள்ளது. நெட்பிலிக்ஸ், பிரைம் வீடியோ இன்னும் பல வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிகள் உள்ளன.

click me!