மிக குறைந்த விலையில் நார்டு ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் மாஸ்டர் பிளான்

By Nandhini Subramanian  |  First Published Jan 20, 2022, 3:34 PM IST

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலை பிரிவில் புதிதாக நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், நார்டு சீரிசில் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஒன்பிளஸ் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய குறைந்த விலை ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 5ஜி கனெக்டிவிட்டி, 50MP பிரைமரி கேமரா, மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 

Latest Videos

undefined


தற்போது இந்தியாவில் விற்பனையாகும் நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி புதிய நார்டு சீரிஸ் மாடல்களின் விலை இதைவிட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

இவ்வாறு குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பட்சத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே இதே பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் சாம்சங், ரியல்மி, சியோமி, ஒப்போ, விவோ மற்றும் இதர இந்திய நிறுவனங்கள் பட்டியலில் இணைந்து விடும். 

ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி போன்ற மாடல்கள் இந்தியாவில் நார்டு சீரிஸ் பிராண்டிங்கின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் விலை ரூ. 27,999 என துவங்குகிறது. ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலின் விலை ரூ. 22,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை  ரூ. 27,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

click me!