50MP கேமரா, 5050mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 5050mAh பேட்டரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
undefined
நோக்கியா ஜி21 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
புதிய நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், 4GB ரேம், 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, இரண்டு 2MP சென்சார்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட இருக்கிறது.
கனெக்டிவிடிக்கு 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், என்.எப்.சி., ஜி.பி.எஸ்., ஏ-ஜி.பி.எஸ். , யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 5050mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு அறிமுகமான நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் கிளேசியர் மற்றும் நைட் நிறங்களில் கிடைக்கிறது.