போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.
போட் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் மேட்ரிக்ஸ் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போட் மேட்ரிக்ஸ் மாடலில் 1.65 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், பல்வேறு பில்ட்-இன் வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் போட் கிரெஸ்ட் ஆப் மூலம் நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை போட் மேட்ரிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் SpO2 மாணிட்டர், ஸ்டெப் கவுண்ட்டர், இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் டிராக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பயனர் உடலில் அன்றாடம் எரிக்கப்படும் கலோரிகள் எண்ணிக்கை, எத்தனை தூரம் நடந்துள்ளார், நடந்தே எவ்வளவு தூரம் சென்றுள்ளார் என்பது போன்ற விவரங்களை போட் மேட்ரிக்ஸ் காண்பிக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மொத்தம் 11 ஆக்டிவ் ஸ்போர்ட் மோட்களை கொண்டிருக்கிறது. இதுதவிர நோட்டிஃபிகேஷன் அலெர்ட், செடண்ட்டரி அலெர்ட்கள், அலாரம், மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன. பயனர் தான் விரும்பும் உடற்பயிற்சிகளை உத்வேகத்துடன் மேற்கொள்ள இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளும் வசதி, BMI சார்ந்த பிரத்யேக திட்டமிடல்களை மேற்கொள்ளலாம்.
இத்துடன் 3ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, முழு சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்திய சந்தையில் போட் மேட்ரிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஓசன் புளூ, பிட்ச் பிளாக் மற்றும் டுவிலைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3,999 ஆகும். இது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள விசேஷ விலை ஆகும். இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற்று வருகிறது.