கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர்டெல் அதில் இருந்து மீள்வதற்காகவே இத்தகைய கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் ப்ரீபெய்டு பிளான்களுக்கன கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயர்த்தப்பட்ட பிளான்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
அதன்படி 48 ரூபாயாக இருந்த அடிப்படை டாப் அப் பிளான் தற்போது 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இதேபோல் 12 ஜிபி டேட்டா வழங்கும் 98 ரூபாய் பிளான், 118 ரூபாயாகவும், 50 ஜிபி டேட்டா வழங்கும் 251 ரூபாய் பிளான், 301 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இவைதவிர அன்லிமிடெட் இலவச கால் வசதியுடன் கூடிய டேட்டா பிளானிற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டு கொண்ட 149 ரூபாய் பிளான், 179 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெடு கால் சேவை, 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் கிடைக்கும்.
இதேபோல் 28 நாட்கள் வேலிடிட்டு கொண்ட 219 ரூபாய் பிளான், 265 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெடு கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும்.
28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய 249 ரூபாய் பிளான், 299 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெடு கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், மற்றும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதேபோல் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் 298 ரூபாய் பிளான், 359 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அன்லிமிடெடு கால் சேவை மற்றும் தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், கிடைக்கும்.
56 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய 399 ரூபாய் பிளானை, 479 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பிளானில் அன்லிமிடெடு கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் மற்றும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 379 ரூபாய் பிளானை, 455 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அன்லிமிடெடு கால் சேவை, 6 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் கிடைக்கும்.
84 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் 598 ரூபாய் பிளானை, 719 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பிளானில் அன்லிமிடெடு கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவையும் கிடைக்கும்.
அதேபோல் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 698 ரூபாய் பிளானை, 839 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அன்லிமிடெடு கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதுபோல ஆண்டு முழுவதுக்குமான அன்லிமிட்டெடு கால் சேவை மற்றும் டேட்டாவுடன் கூடிய பிளான்களின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி 1,498 ரூபாய் திட்டத்தினை, 1,799 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,498 ரூபாய் திட்டத்திற்கான கட்டணம் 2,999 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 26-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர்டெல் அதில் இருந்து மீள்வதற்காகவே இத்தகைய கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்டு பிளான்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.