Iphone SE 5G : ஐபோன் SE+ 5ஜி வெளியீடு - இணையத்தில் லீக் ஆன புது அப்டேட்

By Nandhini SubramanianFirst Published Jan 20, 2022, 2:35 PM IST
Highlights

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE+ 5ஜி வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் SE+ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் SE தோற்றத்தில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அதன்படி ஐபோன் SE+ 5ஜி மாடலில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, அடுத்த தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி, புதிய ஆப்பிள் சிலிகான் பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. ஐபோன் SE+ 5ஜி வெளியீடு பற்றிய புது தகவலை டெக்சாஸ் பகுதியை சேர்ந்த டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஸ் யங் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

இத்துடன் புதிய ஐபோன் SE+ 5ஜி உற்பத்தி பணிகள் இந்த மாதமே துவங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து ஐபோன் SE+ 5ஜி விற்பனை மற்றும் வினியோகம் ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் துவங்க இருக்கிறது. முன்னதாக புதிய ஐபோன் SE மாடலின் பெயர் விவரங்களை இவர் வெளியிட்டார். இவரின் அறிவிப்பு வெளியாகும் முன் ஆப்பிள் புதிய குறைந்த விலை ஐபோன் மாடலை ஐபோன் SE 3 அல்லது ஐபோன் SE 2022 போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யலாம் என்றே கூறப்பட்டது.

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE+ 5ஜி மாடலில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 3GB ரேம், மேம்பட்ட 12MP பிரைமரி கேமரா சென்சார், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. முந்தைய ஐபோன் SE 2020 மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக இணையத்தில் வெளியாகி இருந்த கம்ப்யூட்டர் எய்டெட் டிசைன் ரெண்டர்களின் படி புதிய ஐபோன் SE+ 5ஜி மாடலில் ஃபேஸ் ஐ.டி., டாப் எண்ட் ஐபோன்களில் உள்ளதை போன்ற நாட்ச் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. பின் தற்போதைய தகவல்களின் படி இந்த மாற்றங்கள் எதுவும் புதிய ஐபோன் SE+ 5ஜி மாடலில் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

ஐபோன் SE+ 5ஜி மாடலுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ஏர் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐந்தாம் தலைமுறை ஐபேட் ஏர் மாடல் ஆகும். இதிலும் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் மற்றும் ஆப்ஷனல் 5ஜி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

click me!