OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனிலுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளன.
OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனிலுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளன. இந்தியாவில் கூகுள் பிக்சல் போன், சாம்சங் போனிற்கு அடுத்தப்படியாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகும். பட்ஜெட் லெவல் வாடிக்கையாளர்களுக்காக ஓரளவு பிரீமியத்துடன் நார்டு வகை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய நார்டு சிஇ 3 என்ற ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்பே ஒன்பிளஸ் நார்டு சிஇ 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்த சில விவரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: அடடே… இனி இப்படியும் ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா?
அதன்படி, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 பிராசசர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 120Hz ரெப்ரெஷ் ரேட், FHD+ LCD டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம் , 128 ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 695 பிராசசர் ஆகியவை இருக்கலாம். ரெட்மி நோட் 12 சீரிஸில் உள்ளதை போலவே, இதிலும் 256 ஜிபி மெமரி வேரியண்ட் இருக்கலாம். மேலும், இதில் நல்ல பிராசசர் இருப்பதால் தினசரி தேவைக்கு திறம்பட செயலாற்றும் தன்மை இருப்பதாக தெரிகிறது. கேமராவைப் பொறுத்தவரையில், Nord CE 3 ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் கொண்டி பிரைமரி கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரண்டு மெகாபிக்சல் கேமராவும் இருக்கலாம். ஆனால், அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா இதில் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
இதையும் படிங்க: ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் AirTag கொண்டு வருகிறது! இது என்ன கருவி?
இதற்கு முன்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord CE 2 போனில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஸ்னாப்பர் இருந்தது குறிப்பிடத்தக்கது. செல்பி கேமராவைப் பொறுத்தவரையில் தற்போது வெளிவரவுள்ள Nord CE 2 போனில் 16-மெகாபிக்சல் கேமரா இருப்பதாக தெரிகிறது. OnePlus பொதுவாக அதன் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கு பெயர் போனது. அந்த வகையில், Nord CE 3 இல் சிறிது அப்கிரேடு எதிர்பார்க்கலாம். வரவிருக்கும் OnePlus ஃபோனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரி இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான விவரங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிவரலாம்.