ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனில் அப்டேட் செய்த பிறகு ஸ்கிரீனில் கோளாறு ஏற்பட்டதாகவும், இதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் வேறு ஏதோ காரணங்களை கூறி பிரச்சனையை சரிசெய்ய மறுத்துவிட்டதாகவும் யூடியூபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேசமணி விளாக்ஸ் என்ற பெயரில் யூடியூபர் ஒருவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நான் பயன்படுத்தும் OnePlus 8T ஸ்மார்ட்போனில் அப்டேட் வந்தது. நானும் அப்டேட் கொடுத்தேன். ஆனால், அப்டேட் செய்தே ஒரே நாளில் திரையில் திடீரென பச்சை நிறத்தில் கோடு கோடாக தெரிந்தது. என்னைப் போலவே ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனில் அப்டேட் செய்த பலருக்கும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதாக அறிந்தேன்.
undefined
மேலும் செய்திகளுக்கு..APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!
மேலும், அவ்வாறு அப்டேட் பிரச்சனையால் ஏற்பட்ட பயனர்களுக்கு, இலவசமாகவே ஸ்கிரீன் மாற்றித்தரப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தரப்பில் செய்திகள் வந்தன. இதனையடுத்து மதுரையில் உள்ள ஒன்பிளஸ் ஷோரூம் சென்று, எனது ஸ்மார்ட்போனை கொடுத்தேன். அங்கு இருந்த ஊழியர்கள், ஸ்மார்ட்போன் கீழே விழுந்துவிட்டதா, ஏதேனும் உடைந்துவிட்டதா என்று பார்த்தார்கள். ஆனால், அப்படியான எந்த பாதிப்பும், உடைசல் விரிசலும் இல்லை.
மேலும் செய்திகளுக்கு..Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!
பின்பு, போனை கழற்றி பார்த்துவிட்டு, திருகு (Screw) பகுதியில் லேசாக துருப்பிடித்துள்ளது என்று கூறினார்கள், மேலும், போன் தண்ணீரில் விழுந்துவிட்டதால் தான் இதுபோல துருபிடித்துவிட்டது, எனவே ஸ்கிரீனை சரிசெய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள். ஸ்மார்ட்போன் அப்டேட் செய்த பிறகு தான் திரையில் பிரச்சனை வருகிறது என்று ஒன்பிளஸ் நிறுவனமே ஒருபுறம் ஏற்றுக்கொண்டாலும், வேறு ஏதோ காரணங்களை கூறி போனை சரிசெய்ய மறுக்கிறார்கள்’ இவ்வாறு யூடியூபர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
இதேபோல பல வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் அப்டேட்டால் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதில் சிலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளதாகவும், இதுபோல் அனைவரும் புகார் செய்தால் தான் ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு பாடம் புகட்ட முடியும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
யூடியூபர் நேசமணி விளாக்ஸ் வெளியிட்ட வீடியோ: https://www.youtube.com/watch?v=nAMlXlhP6Q0&ab_channel=NesaManiVlogs
மேலும் செய்திகளுக்கு..WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!