பிளிப்கார்ட் நிறுவனம் ‘பிக் பில்லியன் டேஸ்’ என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வரும் செப்.22 முதல் செப்.30 வரையில் நடைபெற உள்ளது. இதில் எக்கச்சக்கமான ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கலாம்.
பிளிப்கார்ட் நிறுவனம் ‘பிக் பில்லியன் டேஸ்’ என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வரும் செப்.22 முதல் செப்.30 வரையில் நடைபெற உள்ளது. இதில் எக்கச்சக்கமான ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கலாம். இதை தீர்க்கம் வகையில், சிறப்பான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு காணலாம். இந்த விற்பனையில் ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 11,12, 13 ஸ்மார்ட்போன்
ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதனால், அதற்கு முந்தைய பதிப்புகளான ஐபோன் 11,12,13 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் நல்லதொரு ஸ்மார்ட்போனாகும். ஐபோன் 13க்கும், ஐபோன் 14க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. எனவே, நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்று நினைத்து வந்தவர்களுக்கு இந்த ஆஃபர் ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஐபோன் 13 சிறப்பம்சங்கள்:
திரை: 6.1 இன்ச்
பிராசசர்: A15
கேமரா: 12 மெகாபிக்சல் டூயல்
பேட்டரி: 3240 mAh
சார்ஜர்: 20W ஃபாஸ்ட் சார்ஜிங்
அசல் விலை: 69,999 ரூபாய்
ஆஃபர் விலை: 49,999 ரூபாய்
மேலும் படிக்க:வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அருமையான அப்டேட் !!
சாம்சங் பிக்சல் 6A:
ஆப்பிள் ஐபோனுக்கு இணையாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போனுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. எனவே, ஆண்ட்ராய்டு பிரியர்களின் அதிகபட்ச ஆசையே பிக்சல் ஸ்மார்ட்போனை வாங்குவது தான். தற்போது அதற்கான நேரமும் வந்துவிட்டது. பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போனின் விலை கிட்டத்தட்ட 16 ஆயிரம் ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
60 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வொர்த்தான விலையில் விற்பனை செய்யப்படும் ஃபோன் தற்போது, 27,699 ரூபாய்க்கு வருகிறது. Pixel 6a போனில் டென்சர் சிப்செட், 60Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 13 OS ஆகியவை உள்ளது. அட்டகாசமான செல்ஃபீ கேமரா, 2 பின்பக்க கேமராக்கள் உள்ளன. அது தவிர ஸ்டைலிஷான, கைக்கு அடக்கமான தோற்றமும் கொண்டுள்ளது
ஷாவ்மி 11i ஹைபர் சார்ஜ்:
ஷாவ்மி 11, ரெட்மி நோட் 10T ஆகிய ஸ்மார்ட்போன்களும் சிறப்பு பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டும் அமேசான் நிறுவனத்திலே அதிகமாக இடம்பெறும். ஆனால், தற்போது பிளிப்கார்ட் விற்பனையிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஷாவ்மி 11 அறிமுகமான போது இதன் விலையானது 26,999 ரூபாயாக இருந்தது. இதில் விலைக்கு ஏற்ற அம்சங்களும் நிறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், ஷாவ்மி 11i ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனக்கு நல்ல ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷாவ்மி 11 ஹைப்பர் சார்ஜை ரூ.19,990 ஆஃபரில் பெற்றுக்கொள்ளலாம்.
ஷாவ்மி 11 ஹைபர் சார்ஜ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
டிஸ்ப்ளே: 6.67 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் டிமன்சிட்டி 920 (6நானோ மீட்டர்)
கேமரா: 108 மெகா பிக்சல், 8MP, 2MP
முன்பக்க கேமரா: 16 மெகாபிக்சல்
பேட்டரி: 4500 mAh
சார்ஜிங்: 120W ஃபாஸ்ட் சார்ஜிங்
மேலும் படிக்க:Flipkart-ல் அடுத்தடுத்து ஆஃபர்! ஷாவ்மி, ரெட்மி போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு!
ரியல்மி:
ஷாவ்மிக்குப் போட்டியாக ரியல்மி நிறுவனத்தின் GT Neo 3T ஸ்மார்ட்போனும் குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 21,990 ரூபாய் ஆகும். இதிலும், ஷாவ்மி ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்கள் உள்ளன. ஆனால், கேமரா மட்டும் வெறும் 64 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கொண்டுள்ளது.
இதே போல் ரியல்மி 9 5G Speed ஸ்மார்ட்போன் 15,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்றாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. விலைக்கு தகுந்தவாறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இதில் ஸ்னாப்டிராகன் 778G 5G (6nm) சிப் உள்ளது.
மேலும் படிக்க:Flipkartல் அதிரடி ஆஃபர்! Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு ரூ.16 ஆயிரம் தள்ளுபடி!!