ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய நெறிமுறைகள்?

By Dinesh TG  |  First Published Sep 17, 2022, 3:22 PM IST

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன.


உலகளவில் ஆன்லைன் கேமிங் பிரபலமாகி வருகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் முறையான நெறிமுறைகள் இல்லாததால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை காணப்படுகிறது. குறிப்பாக ரம்மி போன்ற விளையாட்டுக்களில் சாதாரண நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பணத்தை இழக்கின்றனர். 

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களை நெறிப்படுத்தும் வகையில், புதிய விதிமுறைகளை அரசு தரப்பில் கொண்டு வரப்பட உள்ளதாகவும், 108 பக்கங்களுக்கு இந்த விதிமுறைகள தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, திறன் அடிப்படையிலான கேமிங், அதிர்ஷ்டம் அடிப்படையிலான கேமிங் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

திறன் அடிப்படையிலான விளையாட்டுகள்:

ஸ்கீல் பேஸ்டு கேம்ஸ் எனப்படும் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் என்பது அறிவை உபயோகப்படுத்தி விளையாடுவது ஆகும். செஸ் போன்ற விளையாட்டுகள் அவரவர் திறனை உபயோகப்படுத்தி விளையாடும் முறைகளாகும்.

சூதாட்டம்:

இது அதிர்ஷ்டத்தையும், வாய்ப்புகளையும் மட்டுமே சார்ந்திருக்கும் விளையாட்டாகும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த விளையாட்டு தான் பாதிப்பு அதிகம் ஏற்படுத்தக் கூடியது. 

ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! வருகிறது "Flipkart Big Billion Days"!!

முதலில் 50 ரூபாய் முதலீடு செய்தால், 100 ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தி, தொடக்கத்தில் பணத்தையும் வாரி வழங்கிவிடுவார்கள். சிறிது நேரத்தில் பயனர்கள் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிகளவு பணத்தை செலவழிக்கும் வகையில் அடிமையாக்கிடுவார்கள். ரம்மி போன்ற சூதாட்டம் போன்ற கேமிங் விளையாட்டுகளுக்கு தமிழகத்தில்  சாமானிய மக்கள் கூட அடிமையாகி பணத்தை இழக்கிறார்கள். 

மிகக்குறைந்த விலையில் Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்! நம்பி வாங்கலாமா?

இவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளை திறன் அடிப்படையிலான விளையாட்டு, வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு என இரண்டாக பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசு முனைப்பாக உள்ளது. மேலும், இணைய பயன்பாட்டுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இணைய வழி மோசடி குற்றங்களை குறைத்திடும் வகையில் இணைய பாதுகாப்பு அமசங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!