ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடங்கவுள்ள நிலையில் ஏராளமான ஆஃபர்களை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் பிக்சல் 6 A ஆனது Flipkart Big Billion Days விற்பனையின் போது ரூ.27,699க்கு கிடைக்கும் எனவும், இதற்கு 1 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடங்கவுள்ள நிலையில் ஏராளமான ஆஃபர்களை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் பிக்சல் 6 A ஆனது Flipkart Big Billion Days விற்பனையின் போது ரூ.27,699க்கு கிடைக்கும் எனவும், இதற்கு 1 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆப்பிள் ஐபோனுக்கு இணையாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போனுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. ஐபோன் போலவே இந்த போனும் கைக்கு அடக்கமாக, உயர்தர பாகங்கள், மென்பொருளுடன் சிறப்பம்சங்களுடன் இருக்கும். எனவே, ஆண்ட்ராய்டு பிரியர்களின் அதிகபட்ச ஆசையே பிக்சல் ஸ்மார்ட்போனை வாங்குவது தான். தற்போது அதற்கான நேரமும் வந்துவிட்டது.
பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போனின் விலை கிட்டத்தட்ட 16 ஆயிரம் ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பிக் பில்லியன் டே சேல் விற்பனையின் போது இந்த ஆஃபர் கிடைக்கும். Pixel 6a போனில் டென்சர் சிப்செட், 60Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 13 OS ஆகியவை உள்ளது. அட்டகாசமான செல்ஃபீ கேமரா, 2 பின்பக்க கேமராக்கள் உள்ளன. அது தவிர ஸ்டைலிஷான, கைக்கு அடக்கமான தோற்றமும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க:ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய நெறிமுறைகள்?
மிகக்குறைந்த விலையில் இந்த கூகுள் பிக்சல் 6 A வானது விற்பனைக்கு வரவுள்தால் ஸ்டாக் வாங்கி வைக்கலாமா, எதிர்பார்க்கும் விற்பனை நடைபெறுமா என்று பிளிப்கார்ட் நிறுவனம் எண்ணியுள்ளது போலும். எனவே, வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட்போனுக்கான வரவேற்பை அறியும் வகையில், முன்பதிவு திட்டத்தை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
அதன்படி, 1 ரூபாய் முன்தொகையாக செலுத்தி, கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். 60 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வொர்த்தான விலையில் விற்பனை செய்யப்படும் ஃபோன் தற்போது, 27,699 ரூபாய்க்கு வர உள்ளதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க:டிண்டர், பம்பிள், கிரிண்டர்- காதலை கண்டறிவதற்கு கொட்டிக்கிடக்கும் டேட்டிங் செயலிகள்..!!