OnePlus 6 and 6T : இனி அந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடையாது - ஒன்பிளஸ் அதிரடி!

By manimegalai a  |  First Published Jan 18, 2022, 2:23 PM IST

ஒன்பிளஸ் நிறுவனம் 2018 ஆண்டு அறிமுகம் செய்த ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட்டை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட்டை நிறுத்துவதாக அறிவித்த இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இரு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் இனி அப்டேட் கிடைக்காது. முன்னதாக, தான் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகள் முக்கிய சாஃப்ட்வேர் அப்டேட், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது.

ஒன்பிளஸ் 6, ஒன்பிளஸ் 6T போன்றே ஒன்பிளஸ்7 ஸ்மார்ட்போனுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது. அதன்படி ஒன்பிளஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று முக்கிய ஓ.எஸ். அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். நவம்பர் 2021 மாதத்தில் ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன்களுக்கு கடைசியாக அப்டேட் வழங்கப்பட்டது. எதிர்கால அப்டேட் நிறுத்தப்படுவது பற்றிய தகவல் ஒன்பிளஸ் கம்யூனிட்டி தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஒன்பிளஸ் மூன்று முக்கிய அப்டேட்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்கியது. ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்கனவே மூன்று முக்கிய அப்டேட்கள் வழங்கப்பட்டுவிட்டன. அதிகாரப்பூர்வ அப்டேட்கள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், இரு ஸ்மார்ட்போன்களும் மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் சார்பில் வழங்கப்படும் செயலிகள் மற்றும் சேவைகளுக்கான அப்டேட்களுடன் சீராக இயங்கும்.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 6.28 இன்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அட்ரினோ 630 GPU, அதிகபட்சம் 8GB ரேம், 16MP+20MP பிரைமரி கேமரா சென்சார்கள், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது. இத்துடன் 3300mAh லி-பாலிமர் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். கொண்டு அறிமுகமானது.

click me!