
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் முதல் வாரத்தில் சீனாவில் இந்த போன் அறிமுகமாகவுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா உள்பட உலக சந்தையில் இந்த போன் எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் அதன் சமீபத்திய ஸ்மார்ட் போனான OnePlus 12ன் தோற்றத்தை சீன சமூக ஊடக தளமான Weiboல் வெளியான ஒரு இடுகையில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.
OnePlus 11ல் பிரபலப்படுத்தப்பட்ட அந்த பச்சை வண்ணத் பட்டேர்ன் வரவிற்கும் OnePlus 12 போனிலும் தொடரும் என்றும், பின்புறத்தில் இதேபோன்ற கேமரா பம்ப் இடம்பெறும் என்றும் அதிகாரப்பூர்வ டீஸர் வீடியோ வெளிப்படுத்துகிறது. ஆகவே இத போன் மீதான மக்களின் ஆர்வம் இன்னும் சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
ரூபாய் 20 ஆயிரத்துக்குள் கிடைக்கும் சிறந்த கேமிங் ஸ்மார்ட் ஃபோன்கள் இவைதான்.. நோட் பண்ணிக்கோங்க.!!
இந்நிலையில் ஒன்பிளஸ் 12 போன் இந்தியாவில் வருகின்ற ஜனவரி 2024ம் ஆண்டு 24ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு முன்னதாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு கான்டஸ்ட் ஒன்றையும் அந்நிறுவனம் நடத்த உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் வெற்றிபெறும் 6 அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கிறது.
இந்திய வெளியீட்டு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்ற பொழுதும், ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட சில தகவல்கள் அதன் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி இந்திய இணையத்தில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி துவங்கி, ஒன்பிளஸ் 12 போன் வெளியாகும் முதல் நாள் வரை இந்த கான்டஸ்ட் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன் பிளஸ் வெப்சைட்டில், நவம்பர் 27ஆம் தேதி துவங்கி, ஜனவரி 23ஆம் தேதி வரை இந்த கான்டஸ்ட் நடக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதனைக் கொண்டு இந்தியா மற்றும் பிற வெளிநாடுகளில் இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்கின்ற ஒரு யூகம் பரவலாக உள்ளது.
உலக அளவில் வளரும் செயற்கை நுண்ணறிவு.. AI வளர்ச்சியில் இந்தியாவின் வாய்ப்பு எப்படி?
ஒரு போட்டியாளர், ஒரு முறை மட்டுமே இந்த கான்டஸ்ட்டில் பங்கேற்க முடியும், தங்கள் மொபைல் எண்ணை வைத்து ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு சப்ஸ்கிரைப் செய்து இந்த கான்டஸ்டில் பங்குபெற முடியும். இறுதியில் வெற்றிபெறும் மூன்று நபர்களுக்கு ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இலவசமாக வழங்கப்படும் என்றும், மேலும் 3 நபர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனத்தின் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.