அந்த விபத்துக்கு இது தான் காரணம்.... குற்றம்சாட்டியவருக்கு அதிரடி அப்டேட் கொடுத்த ஓலா எலெக்ட்ரிக்

By Kevin Kaarki  |  First Published Apr 23, 2022, 3:02 PM IST

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரே சமயத்தில் முன்புறம், பின்புறம் மற்றும் ரிஜென் பிரேக்குகள் செயல்படுத்தப்பட்டன. 


கவுகாத்தியை சேர்ந்த பல்வந்த் சிங் என்ற நபர் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஓலா S1 ப்ரோ மாடல் வேகத்தை குறைத்தாலும், ஸ்பீடு பிரேக்கரின் மேல் ஏறும் போது அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டது என குற்றம் சாட்டி இருந்தார். இந்த விபத்தில் சிக்கிய பல்விந்தர் சிங்கின் வலது கையில் 16 தையல்கள் போடப்பட்டு உள்ளன.

இந்த விவகாரத்தை பல்விந்தர் சிங் டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். டுவிட்டர் பதிவுக்கு தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பதில் அளித்து உள்ளது. அதன்படி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டரில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்து இருக்கிறது. விபத்து ஏற்பட சரியாக முப்பது நிமிடங்கள் முன் வரையிலான ஸ்கூட்டர் செயல்பாடுகளை ஓலா பரிசோதனை செய்து இருக்கிறது.

Latest Videos

undefined

அதிவேகம் காரணம்:

அதன்படி பயனர் ஓலா S1 ப்ரோ மாடலில் பல முறை அதிவேகமாக சென்று இருக்கிறார். 30 நிமிட இடைவெளியில் மட்டும் இந்த இ ஸ்கூட்டர் சுமார் ஐந்து முறை மணிக்கு நூற்றுக்கும் அதிக கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. அதன்படி பயனர் அதிவேகமாக சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்  தெரிவித்து உள்ளது.

மேலும் ஸ்கூட்டர் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரே சமயத்தில் முன்புறம், பின்புறம் மற்றும் ரிஜென் பிரேக்குகள் செயல்படுத்தப்பட்டன. அதிவேகத்தில் திடீரென பதட்டம் அடைந்து வாடிக்கையாளர் அனைத்து பிரேக்குகளையும் செயல்படுத்தி இருக்கிறார், இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருக்கும். பிரேக் அடித்த பின் ஸ்கூட்டரில் வேறு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை," என்று ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. 

அடிக்கடி பிரச்சினை:

முன்னதாக பலமுறை ஓலா ஸ்கூட்டர் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக பலர் டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பயனர் ஒருவர் தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ரிவர்ஸ் மோடிலும் அதிக வேகத்தில் செல்வதாக கூறி, வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். 

click me!