இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளருடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்.
பூனே பதிவு எண் கொண்ட ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவின் படி சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஓலா S1 ப்ரோ மாடலில் மெல்ல புகை கிளம்பி வெளியேறியது. பின் ஸ்கூட்டர் வெடித்து முழுமையாக தீப்பிடிக்க துவங்கியது. இந்த ஸ்கூட்டரை பயன்படுத்திய வாடிக்கையாளரை ஏற்கனவே தொடர்பு கொண்டு விட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்தது:
"பூனேவில் எங்களின் ஸ்கூட்டர் ஒன்றில் ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல் எங்களுக்கு வந்தடைந்தது. ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்து எரிந்தது என்ற காரணத்தை ஆய்வு செய்யும் பணிகளை துவங்கி இருக்கிறோம். அடுத்த சில நாட்களில் இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி அதிக தகவல்கள் வெளியாகும்."
Oh No!
Looks like pic.twitter.com/QZlYkvMbMh
"இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளருடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார். ஓலாவை பொருத்தவரை வாகன பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். எங்களின் பொருட்கள் அனைத்தும் அதிக தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, தேவையான நடவடிக்கையை தொடர்ந்து எடுப்போம். இதுபற்றி கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பலமுறை வெடித்துள்ளன:
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏன் தீப்பிடித்து எரிந்தது என இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. பல சமயங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து எரிந்துள்ளன.
ஓலா S1 ப்ரோ மாடலில் 3.97 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்திய சந்தையில் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.