ஐந்து புது நிறங்கள், மிக குறைந்த விலையில் கிடைக்கும் 2022 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர்

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 26, 2022, 04:32 PM IST
ஐந்து புது நிறங்கள், மிக குறைந்த விலையில் கிடைக்கும் 2022 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர்

சுருக்கம்

இந்திய சந்தையில் புதிய 2022 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையின் 125 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்கள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சூப்பர் ஸ்பிலெண்டர் மாடல் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு போட்டியாக ஹோண்டா ஷைன் மாடல் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிளை பி.எஸ். 6 புகை விதிகளுக்கு அப்டேட் செய்யும் போதே, புதிய நிறங்களிலும் அறிமுகம் செய்து விட்டது. 

2022 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிள்- கிளேஸ் பிளாக், டஸ்கி பிளாக், நெக்சஸ் புளூ, ஹெவி கிரே மற்றும் சி.பி. ரெட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. அனைத்து நிற வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான கிராபிக்ஸ் மற்றும் முன்புற ஃபெண்டரில் மேட்சிங் நிறம் பூசப்பட்டு உள்ளது.

ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிள் மமாடலில் 124.7சிசி, சிங்கில் சிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.73 பி.ஹெச்.பி. திறன், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் பி.எஸ். 4 மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2020 ஆண்டு வாக்கில் ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மாடலின் சேசிஸ்-இல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்த வகையில் புதிய மாடலில் இதே மாற்றங்கள் பின்பற்றப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ரிஜிட் டைமண்ட்  ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளை ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்தி, முன்பை விட மேலும் சிறப்பாக கட்டுப்படுத்த வழி செய்கிறது.

ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிள் மாடலில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், யு.எஸ்.பி. சார்ஜர், ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

2022 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிரம் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 74 ஆயிரத்து 700 என்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 78 ஆயிரத்து 600 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!