Samsung Galaxy M33 : சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அமேசான் இந்தியா வலைதளத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் ஒரு வழியாக தனது கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்வு சரியாக மதியம் 12 மணிக்கு தொடங்க இருக்கிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அமேசான் இந்தியா வலைதளத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றும் அமேசான் தளத்தில் காணப்படுகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் 5 நானோ மீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா கோர் பிராசஸர், 6000mAh பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
undefined
இத்துடன் 6.6 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமேசான் தளத்தில் புதிய ஸ்மார்ட்போனினை வாங்க விரும்புவோர் சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட்டில் உள்ள Notify Me ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்ததும், ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றிய அப்டேட்கள் உடனடுக்குடன் வழங்கப்படும்.
சாம்சங் கேலக்ஸி M33 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.6 இன்ச் FHD+ 1080x2048 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 பிராசஸர்
- அதிகபட்சம் 8GB ரேம்
- 128GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4.1
- 50MP பிரைமரி கேமரா
- 5MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- 6000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்