ரிலையன்ஸ் ஜியோ ரூ. 601, ரூ. 799 மற்றும் ரூ. 4199 போன்ற சலுகைகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கி வருகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ரூ. 279 விலையில் புதிய கிரிகெட் ஆட்-ஆன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் ரூ. 499 மதிப்பிலான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இன்று ஐ.பி.எல். 2022 கிரிகெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சலுகை கொண்டு கிரிகெட் பிரியர்கள் ஐ.பி.எல். தொடரை முழுமையாக கண்டுகளிக்கலாம்.
புதிய ரிலையன்ஸ் ஜியோ ரூ. 279 சலுகை தேர்வு செய்யப்படும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. புது சலுகை பற்றிய அறிவிப்பிலேயே ரிலையன்ஸ் ஜியோ இந்த தகவலை தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய சலுகையை பயனர்கள் மைஜியோ செயலி மூலம் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ரூ. 279 ஜியோ கிரிகெட் ஆட் ஆன் சலுகை:
ஜியோ ரூ. 279 கிரிகெட் ஆட்-ஆன் சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. அந்த வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சேவையை பயனர்கள் தங்களின் மொபைல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய ரூ. 279 சலுகையில் 15GB அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி பயனர்கள் ரிசார்ஜ் செய்து இருக்கும் பழைய சலுகையின் வேலிடிட்டி முடியும் வரை வழங்கப்படுகிறது.
கிரிகெட் ஆட்-ஆன் சலுகை என்பதால், ஜியோ ரூ. 279 சலுகையில் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். என மற்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. புதிய ஜியோ ரூ. 279 சலுகையை பயனர்கள் தங்களின் மைஜியோ செயலியில் இருந்தபடி ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் கிடைக்கிறது.
சமீபத்திய சலுகைகள்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ. 499 மற்றும் ரூ. 1499 விலையில் ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்தது. இரு சலுகைகளிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ. 1499 சலுகையில் ஒரு வருடத்திற்கான வேலிடிட்டியும், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 2GB டேட்டா போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ. 499 ரிசார்ஜ் சலுகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இரு சலுகைகள் தவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 601, ரூ. 799 மற்றும் ரூ. 4199 போன்ற சலுகைகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கி வருகிறது.