எலெக்ட்ரிக் வாகனங்களுடன் அக்ஸ்சரீ முற்றிலும் இலவசம் - மாஸ் சலுகை அறிவிப்பு..!

By Kevin Kaarki  |  First Published Mar 26, 2022, 5:02 PM IST

HOP எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கும் போதே அக்சஸரீக்களை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.


HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களுக்கான அக்சஸரீக்களை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை HOP லியோ மற்றும் HOP லைஃப் போன்ற மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவை மார்ச் 31, 2022 வரை வழங்கப்படும் என HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 

வசந்த காலத்தில் வருகையை மற்றும் பண்டிகை காலத்தை வரவேற்கும் வகையில் இந்த சலுகைகையை HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் அறிவித்து உள்ளது. HOP எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கும் போதே அக்சஸரீக்களை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். இவை தேர்வு செய்யப்பட்ட சோன்களில் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

"அறிமுகமானது முதல், HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் இளம் வயது ரைடர்களுக்கு அதிக திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்கும் குறிக்கோளை கொண்டிருக்கிறது. போக்குவரத்து துறை படிம எரிபொருளை அதிகம் சார்ந்து இருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் இந்த துறை தான் அதிகளவு காற்று மாசு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இவை தான் நாம் வாழும் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது," என புதிய சலுகைகளை அறிவிக்கும் போது HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் மூத்த விளம்பர பிரிவு அலுவலர் ராஜ்நீஷ் சிங் தெரிவித்தார். 

"இந்த பண்டிகை காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை கிடைக்க வேண்டும் எனும் காரணத்தால், சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறோம். தற்போது ஒவ்வொரு HOP வாகனத்திற்கும் இலவச அக்சஸரீக்களை வழங்கி வருகிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய சந்தையில் HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் HOP லியோ மற்றும் HOP லைஃப் என இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர HOP லைஃப் 2.0 மற்றும் எலெக்ட்ரிக் பைக் என புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

தற்போது இந்திய சந்தையில் HOP எலெக்ட்ரிக் மொபிலிட்டி விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரன்னிங் கட்டணம்  கிலோமீட்டருக்கு 20 பைசா ஆகும். இது வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட பெருமளவு குறைந்த தொகை ஆகும். 

click me!