கனெக்டெட் அம்சங்களுடன் இ ஸ்கூட்டர் அறிமுகம் செய்த ஒகினவா - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

By Kevin Kaarki  |  First Published Mar 27, 2022, 3:42 PM IST

புதிய ஒகி 90 மாடலில் முழுமையான எல்.இ.டி.  ஹெட்லேம்ப், பேட்டரி விசிபிலிட்டிக்காக லைட் லென்சார், மற்ற ஒகினவா வாகனங்களை விட அளவில் சற்று நீளமாக இருக்கிறது.


ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் புதிய ஒகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒகினவா ஒகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.22 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.  புதிய ஒகி 90 மாடல் ஏராளமான ஸ்டைலிங் ஹைலைட்கள் மற்றும் புதிய தலைமுறை அம்சங்களை கொண்டிருக்கிறது. 

இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் ஐபிரைஸ் பிளஸ் மற்றும் பிரைஸ் ப்ரோ என சக்திவாய்ந்த மாடல்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் அறிமுகம் செய்து வருகிறது. எனினும், தற்போது அறிமுகம் செய்து இருக்கும் ஒகினவா ஒகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ஓலா S1 ப்ரோ, ஏத்தர் 450X, டி.வி.எஸ். ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் வகையில் உருவாக்கி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

ஒகினவா ஒகி 90 ஸ்டைலிங்:

புதிய ஒகி 90 மாடலில் முழுமையான எல்.இ.டி.  ஹெட்லேம்ப், பேட்டரி விசிபிலிட்டிக்காக லைட் லென்சார், மற்ற ஒகினவா வாகனங்களை விட அளவில் சற்று நீளமாக இருக்கிறது. மேலும் இதில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பின்புறம் அமரும் பயணிக்கு தடிமனான கைப்பிடிகளை வழங்கி இருக்கிறது. இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 16 இன்ச் அலுமினியம் அலாய் வீல் கொண்ட மாடலாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது.

மோட்டார், பேட்டரி மற்றும் ரேன்ஜ்:

ஒகினவா ஒகி 90 மாடலில் 3800 வாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். மேலும் ஒகி 90 ஸ்கூட்டர் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஒகி 90 மாடலில் கழற்றக்கூடிய 72V 50 AH லித்தியம் அயன் பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தை வெறும் பத்து நொடிகளில் எட்டிவிடும். மேலும் இதில் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒகினவா ஒகி 90 மாடல் இகோ மற்றும்  ஸ்போர்ட்ஸ்  என இரண்டு விதமான ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இகோ மோடில் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். 

கனெக்டெட் அம்சங்கள்:

ஒகினவா ஒகி 90 மாடலில் பல்வேறு கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மியூசிக் பிளே கண்ட்ரோல், வெஹிகில் பேட்டரி சார்ஜ் நிலை, ஜியோ ஃபென்சிங், ஃபைண்ட் மை வெஹிகில் ஆப்ஷன், ட்ரிப் ஹிஸ்டரி, டிரைவர் ஸ்கோர், ஸ்பீடிங் அலெர்ட்கள், நேவிகேஷன், வெஹிகில் ஸ்டேட்டஸ் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய ஒகினவா ஒகி 90 மாடல் ரெட், வைட், புளூ மற்றும் கிரே என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

click me!