தவறான தகவல் மற்றும் தனியுரிமைச் சிக்கல்களை எதிர்த்துப் போராடுவதற்கு, AI-உருவாக்கிய டீப்ஃபேக்குகளை அகற்றுவதற்கான பயனர் கோரிக்கைகளை YouTube இப்போது அனுமதிக்கிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் AI அபரிவிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. தனிப்பட்ட நபரின் அமைப்பு, திறன் அனைத்தையும் நல்வழியிலும், தவறான வழியிலும் கட்டமைக்க பயன்படுத்தப்படுகிறது. அண்மையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ, ஆலியாபட்டின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இது போன்ற தவறான தகவல்களின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும், பயனர் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், YouTube அதன் கண்டென்ட் மதிப்பாய்வு அம்சங்களை விரிவுபடுத்தியுள்ளது.
பயனர் கோரிக்கைக்கு அனுமதி!
தவறான நோக்கத்தில், டீப்ஃபேக்குகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களை அகற்றுமாறு பயனர்கள் கோருவதற்கு இப்போது Youtube தளம் அனுமதிக்கிறது.
பிரைவசி அப்டேட்
தனி ஒரு நபரின் முகம் அல்லது குரலை யதார்த்தமாக உருவகப்படுத்தும் வீடியோக்கள் ஃபேக் வீடியோக்கள் என அழைக்கப்படுகின்றன. முன்னதாக, AI-உருவாக்கிய கண்டென்ட்கள் தரமிறக்குதல் கோரிக்கைகள், பதிப்புரிமை மீறல் கோரிக்கைகளின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்தது. இப்போது அது மாற்றப்பட்டுள்ளது.
மோதிரத்தை கேஜெட்டாக மாற்றி சாம்சங்! வெற லெவல் AI அம்சங்களுடன் 'கேலக்ஸி ரிங்'!
தற்போது, YouTube-ன் புதிய பிரைவசி அப்டேட் பதிப்பில், குறிப்பாக டீப்ஃபேக் வீடியோக்களை கையாள புதிய செயல்முறையை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதுள்ள YouTube-ன் தனியுரிமை சேனல்கள் மூலம் பயனர்கள் இப்போது தரமிறக்குதல் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். தனிநபரது அனுமதியின்றி டீப்ஃபேக் வீடியோக்களில் ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய நபர்களுக்கு இந்தப் புதுப்பிப்பு மிக முக்கியமானது.
டீப் ஃபே தரமிறக்குதல் - எவ்வாறு செயல்படுகிறது?
* பயனர்கள் தங்கள் தோற்றம் அல்லது குரலை உருவாக்க AI பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் வீடியோக்களை நீக்க நேரடியாக யுடியூப் தளத்தில் கோரிக்கை வைக்கலாம்.
* தளத்தின் தனியுரிமை வழிகாட்டுதல்களை மீறுகிறதா என்பதைத் தீர்மானிக்க, கோரிக்கை வைக்கப்பட்ட வீடியோவை YouTube மறுமதிப்பீடு செய்யும்.
* பொது நபர்கள் அல்லது கேளிகை அல்லது செய்திக்குரியதாக கருதப்படும் வீடியோ கண்டென்ட்களுக்கு விதிவிலக்குகள் இருக்கலாம்.
இந்த புதிய அப்டேட் மூலம், பயனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான தளத்தை வளர்ப்பதற்கு YouTube கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
undefined
போட்டோ, வீடியோவை ஷேர் செய்ய வித்தியாசமான வசதியை வழங்கும் கூகுள் போட்டோஸ்!