வரவிருக்கும் My Week அம்சம் வாரம் தோறும் பயனர்களின் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாகப் பகிரக்கூடிய ஒரு தொகுப்பாகத் உருவாக்கிக் கொடுக்கும் என்றும் கூகுள் கூறுகிறது
கூகுள் போட்டோஸ் (Google Photos) சேவையில் "மை வீக்" (My Week) என்ற புதிய அம்சம் வரவுள்ளது. இதன் மூலம் வாரம் தோறும் பயனர்கள் தங்கள் நினைவுகளை புகைப்படங்கள் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
வரவிருக்கும் இந்த அம்சம் வாரம் தோறும் பயனர்களின் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாகப் பகிரக்கூடிய ஒரு தொகுப்பாகத் உருவாக்கிக் கொடுக்கும் என்றும் கூகுள் கூறுகிறது.
தற்போதைய கூகுள் போட்டோஸ் (Google Photos) செயலியின் 6.90 வெர்ஷனில் இந்த அம்சம் இன்னும் வரவில்லை. ஆனால் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின்போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள் இந்த அம்சம் இருக்கும் என்று காட்டுகிறது.
மை வீக் (My Week) அம்சம் போட்டோஸ் அப்ளிகேஷனில் உள்ள மெமரீஸ் (Memories) பகுதியில் புதிய டைலாகத் தோன்றும். பயனர்கள் இந்த டைலை தேர்வு செய்யும்போது பகிர்வதற்கான புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, வாராந்திர நினைவுகளை மற்றவர்களுடன் பகிர்வதற்கான ஆம்ஷன் கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மெமரீஸ் பகுதியில் பிரத்யேகமான கார்டுகள் வடிவில் இருக்கும் அட்டையில் காட்டப்படும். இது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழகான வழியாக இருக்கும் என்று கூகுள் நம்பிக்கை தெரிவிக்கிறது.
பகிரப்பட்ட நினைவுகள் தொகுப்பைப் பெறுபவர்கள் தங்கள் மொபைலில் போட்டோஸ் செயலில் இருக்கும் மெமரீஸ் (Memories) பகுதியில் அவற்றைப் பார்க்கலாம். அவர்களுக்கு ஸ்லைடு ஷோ வடிவில் படங்கள் மற்றும் வீடியோக்கள் தோன்றும். அவர்கள் குறிப்பிட்ட படத்தை லைக் மற்றும் கமெண்ட் செய்யலாம். இதன் மூலம் இந்த அம்சம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என கூகுள் சொல்கிறது.
கூகுள் போட்டோஸ் (Google Photos) அப்ளிகேஷனில் மை வீக் அம்சத்துடன் கூடுதலாக, பல சிறிய அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, Places பகுதிக்கான UI மேம்படுத்தப்பட்டுள்ளது.