பாஸ்வேர்டு இல்லாமலே வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்... இனிமே பாஸ்கீ தான் எல்லாமே!

By SG Balan  |  First Published Oct 18, 2023, 1:11 PM IST

சமீபத்திய அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பாஸ்கீ அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் ஐபோன்களுக்கான அப்டேட் பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை.


வாட்ஸ்அப் செயலியை பாஸ்வேர்டு இல்லாமல் பாஸ்கீ அம்சத்தை பயன்படுத்தி லாக்இன் (login) செய்யும் என்று அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களும் இந்த வசதியைப் பெறுகிறார்கள். சமீபத்திய அப்டேட்ட் மூலம் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய அம்சம் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் பாஸ்வேர்டு மூலம் உள்நுழைவதைத் தவிர்ப்பதன் மூலம் சிறிது நேரத்தைச் மிச்சப்படுத்தவும் முடியும் என்று வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா கருதுகிறது. இது பற்றி திங்கள்கிழமை இரவு ட்விட்டர் தளத்தில் அறிவிப்பு வெளியானது.

Latest Videos

undefined

இனி லைக், ரீட்வீட், ரிப்ளை செய்ய கட்டணம்! ட்விட்டரை குட்டிச்சுவராக்கும் எலான் மஸ்க்!

“ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரு பாஸ் கீ மூலம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் வாட்ஸ்அப்பில் உள்நுழைய முடியும். முகம், கைரேகை அல்லது பின் நம்பரை பாஸ் கீயாக பயன்படுத்தலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நீண்ட காலமாக பீட்டா சேனலில் இந்த அம்சத்தை சோதனை செய்துவந்த நிலையில், இப்போது அது சமீபத்திய அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் ஐபோன்களில் வாட்ஸ்அப் பாஸ்கீ வசதி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை.

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் பயனர்களுக்கு பாஸ்கீ அம்சத்தை அளித்துள்ளன. கடந்த வாரம் கூகுள் நிறுவனம் தனது பயனர்களை பாஸ்வேர்டுக்குப் பதிலாக பாஸ்கீயை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. கைரேகை, முகம் அல்லது பின் நம்பர் பயன்படுத்தினால், பாஸ்வேர்டு பயன்படுத்துவதைவிட 40 சதவீதம் வேகமாக உள்நுழையலாம் என்றும் விளக்கியுள்ளது.

ட்விட்டருக்கு ரூ.3 கோடி அபராதம்! குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் கமுக்கமாக இருந்த எலான் மஸ்க்

click me!