புதிய நத்திங் போன் 1 மாடலின் கீழ்புறம் பெசல் எதுவும் இருக்காது என நத்திங் நிறுவனம் உறுதியாக தெரிவித்து உள்ளது.
நத்திங் போன் 1 மாடல் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. நத்திங் இந்தியா துணை தலைவர் மற்றும் பொது மேலாளர் மனு ஷர்மா நத்திங் போன் 1 மாடல்கள் தமிழ் நாட்டில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுக்க விற்பனைக்கு அனுப்பப்படும் என தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக நத்திங் போன் 1 மாடலின் பின்புற கேமரா மற்றும் மெட்டல் ஃபிரேம் உள்ளிட்டவை தெரியும் படியான டீசர் ஒன்றை நத்திங் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மூலம் உருவாக்கப்பட இருப்பதாக நத்திங் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. நத்திங் போன் 1 மாடலின் பின்புறம் நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் மாடலில் உள்ளதை போன்ற டெக்ஸ்ச்சர் கொண்டு உள்ளது.
undefined
டிசைன் விவரங்கள்:
நத்திங் போன் 1 மாடல் டிரான்ஸ்பேரண்ட் பேக் கொண்டிருக்கும் என நத்திங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. நத்திங் போன் 1 மாடலின் கீழ்புறம் பெசல் எதுவும் இருக்காது என நத்திங் நிறுவனம் உறுதியாக தெரிவித்து உள்ளது.
தற்போதைய டீசரில் நாளை பார்க்கிறேன் எனும் கூறும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், ஸ்மார்ட்போனின் மற்றொரு டீசர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் நத்திங் போன் 1 மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
நத்திங் போன் 1 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.55 இன்ச் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
- 8GB ரேம்
- 256GB மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP டெப்த் அல்லது மேக்ரோ கேமரா
- 32MP செல்பி கேமரா
- 4500mAh பேட்டரி