எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடிக்காமல் இருக்கனுமா? இதை மட்டும் செய்யாதீங்க...!

By Kevin KaarkiFirst Published Jun 14, 2022, 5:08 PM IST
Highlights

வெப்ப நிலைக்கு அடுத்தப்படியாக சார்ஜிங் செய்யும் போது மேற்கொள்ளப்படும் சிறு தவறுகள் தீ விபத்து ஏற்பட காரணிகளாகி விடுகின்றன.

ஸ்மார்ட்போன் மாடல்களில் உள்ளதை போன்றே எலெக்ட்ரிக் வாகனங்களிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் தான் உள்ளன. இவை நேரடி சூரிய வெளிச்சத்தில் நிறுத்தி வைக்கப்படும் போது, பேட்டரி அதிக சூடாகி வெடித்து சிதறவது அல்லது தீப் பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி நம்மை பதற்றத்தில் ஆழ்த்துகின்றன. 

கோடை காலத்தில் ஏற்படும் அதிகளவு வெப்ப நிலை காரணமாக பேட்டரிகள் வழக்கத்தை விட அதிக சூடாகின்றன. இதன் காரணமாகவே தீ விபத்துக்களும் ஏற்படுகின்றன. வெப்ப நிலைக்கு அடுத்தப்படியாக சார்ஜிங் செய்யும் போது மேற்கொள்ளப்படும் சிறு தவறுகள் தீ விபத்து ஏற்பட காரணிகளாகி விடுகின்றன. மக்கள் தவறான அவுட்புட் கரண்ட் வழங்கும் சார்ஜர்களை பயன்படுத்துகின்றனர். இவை தேவைக்கு அதிகமான மின்சாரத்தை பாயச்ச்சும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இவை மட்டும் இன்றி பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துக்கள் ஏற்படலாம். விபத்துக்களால் பேட்டரி சேதம் அடைந்து, அதில் உள்ள செல்களில் ஏற்படும் சிறு பொறி காரணமாக தீ விபத்து ஏற்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப் பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

- வாகனத்தை பயன்படுத்துவதற்கு சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் முன் சார்ஜ் செய்ய வேண்டும். வாகனத்திற்கு சார்ஜ் ஏற்றியதும், சுமார் 45 நிமிடங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் போது சார்ஜிங்கால் ஏற்பட்ட வெப்பம் தணிந்து விடும். 

- வாகனத்தை சார்ஜ் செய்ய, சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கிய ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசரத்திற்கு செய்யலாம், என கருதி லோக்கல் சார்ஜரை கொண்டு வாகனத்திற்கு சார்ஜ் ஏற்ற வேண்டாம்.

- பேட்டரி கேஸ் சேதம் அடைந்து இருந்தாலோ அல்லது கேசில் தண்ணீர் நிரம்பி இருந்கதாலோ, உடனடியாக எலெக்ட்ரிக் வாகன டீலரை அனுக வேண்டும். பேட்டரியை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் பேட்டரி நேரடி சூரிய வெளிச்சம், தீப் பிடிக்கும் தன்மை கொண்ட பகுதியின் அருகில் வைக்கக் கூடாது. 

- ஸ்கூட்டரை எப்போது பார்க் செய்தாலும், அந்த பகுதியில் நிழல் இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எலெக்ட்ரிக் வாகனத்தை நேரடி சூரிய வெளிச்சத்தில் நிறுத்துவதை பெருமளவு தவிர்த்திட வேண்டும். 

- சார்ஜ் ஏற்றாத சமயத்தில் சார்ஜர் அன்-பிளக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். பேட்டரி மற்றும் சார்ஜர் ஈரம் இல்லாத, சுத்தமான, அதிக காற்றோட்டம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும். 

click me!