சமீபத்தில் தான் ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் ஸ்டைல் வேரியண்டை அப்டேட் செய்து புதிதாக 8 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கியது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கோடா குஷக் புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்ட் ஸ்கோடா குஷக் ஸ்டைல் (non-sunroof -NSR) என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்கோடா குஷக் ஸ்டைல் வேரியண்டை விட ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும். புது வேரியண்டில் குஷக் ஸ்டைல் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ள சில அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன.
புதிய ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR மாடல் 1.0 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. இந்த வேரியண்டில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவில்லை. இந்த ஆப்ஷன் ஸ்கோடா குஷக் ஸ்டைல் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.
undefined
மாற்றங்கள்:
பெயருக்கு ஏற்றார் போல் புது வேரியண்டில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டைல் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் மேலும் சில அம்சங்களும் நீக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் ஸ்டைல் வேரியண்டை அப்டேட் செய்து புதிதாக 8 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கியது. இத்துடன் புதிய ஸ்டைல் NSR மாடலில் டிஜிட்டல் டையல்கள் நீக்கப்பட்டு வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.
ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR வேரியண்டில் ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் உள்ளிட்டவை நீக்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர புதிய 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆறு ஏர்பேக், கீலெஸ் எண்ட்ரி மற்றும் கோ, லெதர் இருக்கை கவர்கள், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் வெண்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள் உள்ளன.
விலை விவரங்கள்:
ஸ்கோடா குஷக் மாடலின் விலை தற்போது ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 114 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 148 பி.ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் 1.0 TSI மற்றும் 1.5 TSI என்ஜின்கள் ஸ்டைல் மற்றும் மாண்ட் கர்லோ வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.