மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா நிறுவனம் 250 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிப் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது.
யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை லீசுக்கு விடும் புது வியாபாரத்தை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய லீசிங் வியாபாரத்தை மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா பெயரில் நடத்த யமஹா முடிவு செய்து உள்ளது.
புதிய வியாபாரத்தின் படி யமஹா நிறுவனம் சிப் எலெக்ட்ரிக் எனும் டெலிவரி சர்வீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறது. புதிய லீசிங் வியாபாரத்தில் மோட்டோ பிஸ்னஸ் சர்வீஸ் இந்தியா நிறுவனம் 250 ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிப் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது. சிப் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தனது வியாபாரத்தில் பயன்படுத்த இருக்கிறது.
நாடு முழுக்க சுமார் 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சிப் வைத்து இருக்கிறது. இது மட்டும் இன்றி இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை நீட்டிக்கவும் சிப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. 2024 வாக்கில் 1.5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருக்க சிப் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது.
யமஹா NEO’s:
புதிய வியாபார கூட்டணியின் மூலம் யமஹா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் பெரிய திட்டங்களை வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்து உள்ளது. தற்போது யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்கூட்டர் யமஹா NEO’s எனும் பிராண்டிங்கில் விற்பனைக்கு வர இருக்கிறது. யமஹா நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மாடல் ஆகும்.
யமஹா நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் புதிய NEO’s மாடலில் 2.5 கிலோ வாட் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 50.4 வோல்ட், 19.2 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்தால் 68 கிலோ மீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.