இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் புதிய 4K ஸ்மார்ட் டி.வி. மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை க்ரிஸ்டல் 4K நியோ சீரிசில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டி.வி. சீரிசில் பர்கலர் தொழில்நுட்பம் உள்ளது. இது தலைசிறந்த விஷூவல் அனுபவத்தை வழங்கும். இதன் மோஷன் அக்செல்லரேட்டர் தரவுகளின் ஃபிரேம்களை தானாக கண்டறிந்து காம்பன்சேட் செய்யும். இது காட்சிகளில் மோஷன் பிளர் ஏற்படுவதை தவிர்க்க செய்கிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட் டி.வி. மாடலில் உள்ள க்ரிஸ்டல் பிராசஸர் 4K இண்டகிரேடெட் கலர் மேப்பிங் தொழில்நுட்பம், உண்மையான நிறங்களை அனுபவிக்க வழி செய்கிறது. இதில் மிக மெல்லிய 3-சைடு பெசல்-லெஸ் டிசைன் உள்ளது. அசத்தலான சவுண்ட் அனுபவத்தை வழங்க இந்த ஸ்மார்ட் டி.வி. மாடலில் Q சிம்பனி அம்சம் உள்ளது. இது ஸ்பீக்கர் மற்றும் சவுண்ட்பார் ஆகியவற்றில் சவுண்ட் அனுபவத்தை மேம்படுத்தி, சிறப்பான சரௌண்ட் சவுண்ட் எஃபெக்ட்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டி.வி. மாடலில் PC மோட் உள்ளது. இது டி.வி.யை தனிப்பட்ட கணினியாக பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.
undefined
சாம்சங் க்ரிஸ்டல் 4K நியோ 2022 அம்சங்கள்:
- 43 இன்ச், 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன்
- 50Hz ரிப்ரெஷ் ரேட்
- க்ரிஸ்டல் பிராசஸர் 4K
- HDR10+
- மெகா காண்டிராஸ்ட், ஆட்டோ கேம் மோட், பர்கலர், UHD டிம்மிங்
- டால்பி டிஜிட்டல் பிளஸ், Q சிம்பனி, அடாப்டிவ் சவுண்ட்
- 2CH ஸ்பீக்கர்கள்
- டைசன் ஓ.எஸ்.
- ப்ளூடூத், வைபை 5, ஈத்தர்நெட், HDMIx3, யு.எஸ்.பி.x1
- பிக்ஸ்பி மற்றும் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் க்ரிஸ்டல் 4K நியோ ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் விலை ரூ. 35 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டி.வி. மாடல் விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஷாப் தளங்களில் நடைபெறுகிறது.