அதிரடி அம்சங்களுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 24, 2022, 04:19 PM IST
அதிரடி அம்சங்களுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

சுருக்கம்

நாய்ஸ் நிறுவனம் நாய்ஸ்பிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, புதிய கலர்பிட் அல்ட்ரா Buzz மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆடியோ சாதனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமான நாய்ஸ், இந்திய சந்தையில் புதிய கலர்பிட் அல்ட்ரா Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் அம்சம் வழங்கப்பட்டு கொண்டுள்ளது. சில தினங்களுக்கு முன் நாய்ஸ் நிறுவனம் நாய்ஸ்பிட் Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, புதிய கலர்பிட் அல்ட்ரா Buzz மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz மாடலில் 1.75 இன்ச் ஃபுல் டச் எல்.சி.டி. டச் ஸ்கிரீன், நூற்றுக்கும் அதிக வாட்ச் பேஸ்கள், வாட்ச் பேஸ்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் ஆப்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரன்னிங், டிரெட்மில், வாக்கிங், ஸ்பின்னிங், சைக்ளிங், யோகா, ஹைக்கிங், பிட்னஸ். கிளைம்பிங் என நூறு ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.  

இந்த ஸ்மார்ட்வாட்ச் 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங், ஸ்டாக்ஸ், வொர்ல்டு கிளாக், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND போன்ற சென்சார்கள் மற்றும் ரிமைண்டர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz அம்சங்கள்:

- 1.75 இன்ச் ஃபுல் டச் எல்.சி.டி. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- நூற்றுக்கும் அதிக வாட்ச் பேஸ் 
- வாட்ச் பேஸ்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி
- நூறு ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங்
- SpO2 மாணிட்டரிங்
- ஸ்லீப் மாணிட்டரிங்
- குயிக் ரிப்ளை
- ஸ்மார்ட் DND
- ரிமைண்டர்

நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz ஸ்மா்ர்ட்வாட்ச் சார்கோல் பிளாக், ஷேம்பெயின் கிரே மற்றும் ஆலிவ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா Buzz ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்குகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

WhatsApp Update: அப்பாடா, இனி யாருக்கும் தெரியாது.! நிம்மதி பெருமூச்சு விடும் பயனாளர்கள்.!
டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..