ஏடிஎம் நம்பரை பயன்படுத்தாமல், கை ரேகை மட்டுமே பயன்படுத்தி, பண பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக ஒரு புதிய கார்டு முறை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த புதிய முறையை அமெரிக்காவைச் சேர்ந்த மாஸ்டர்கார்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்த கார்டை பயன்படுத்த முதலில் வணிக நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்பு, அவர்களின் விரல்ரேகை டிஜிட்டல் குறியீடாக மாற்றப்படும்.
பின்னர் இந்த கார்டை உலகில் உள்ள எந்த ஒரு ஈஎம்வி கார்ட் மையத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில், உள்நாட்டு தயாரிப்பான ரூபே கார்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு பயன்படுத்தும் போது, ச்வைபிங் மெஷினில் மாஸ்டர் அல்லது விசா கார்டுகளை மட்டுமே ஏற்பதாக உள்ளன. மேலும் ஏடிஎம் நம்பரை குறிப்பிட வேண்டும். தற்போது இதற்கு மாற்றாகதான்
கைரேகை வைத்து பரிவர்த்தனை செய்யவதற்காக பயோமெட்ரிக் தகவல்கள் அடங்கிய டெபிட்கார்டுகளை மாஸ்டர்கார்டு நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இனி கை ரேகையை பயன்படுத்தியே, பணபரிவர்த்தனையில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது