ரயில்களின் தாமதம், வருகை, புறப்பாடு அனைத்துக்கும் ஒரே தீர்வு - வருகிறது ‘மெகா ஆப்ஸ்’

First Published Apr 23, 2017, 3:11 PM IST
Highlights
mega apps for train timing


ரெயில்வே துறையின் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு அளிக்கும் மெகா ஆப்ஸ்(செயலி) வரும் ஜூன் மாதம் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. ‘ஹிந்த்ரெயில்’ என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் இந்த செயலி, ஏற்கனவே இருக்கும் அனைத்து செயலிகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக அமையும்.

இந்திய ரெயில்வே சார்பில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த செயலியில்ரெயில்வே வருகை நேரம், புறப்படும் நேரம், தாமதம், ரெயில் ரத்து, எந்த பிளாட்பார்மில் ரெயில்கள் வந்து நிற்கும், ரெயில்கள் குறித்த விவரங்கள், படுக்கை வசதி விவரங்கள், புகார்கள், ரெயில் சுத்தம், பாதுகாப்பு தொடர்பான புகார்கள ஆகியவை இருக்கும்.

மேலும், ரெயில் சேவை தவிர்த்து, ரெயில்வே நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் ‘’டாக்சிசேவை, ஓய்வு அறைகள், தனியார் விடுதிகள் முன்பதிவு, ஓட்டல்கள், சுற்றுலா பேக்கேஜ்கள், இ-கேட்டரிங் உள்ளிட்ட சுற்றுலா தொடர்பான வசதிகளும் அந்த ஆப்ஸில் இடம் பெற்றுள்ளன.

இந்த சேவைகளை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் ேமற் கொண்டு, வருவாய் பகிர்வில் ரெயில்வே செயல்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ரெயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரெயில்கள் எப்போது புறப்படும், எப்போது வரும், தாமதம், வேகம், இடவசதி உள்ளிட்ட எந்த தகவலும் பயணிகளுக்கு முறையாகக் கூறப்படுவதில்லை எனப் புகார்கள் ரெயில்வே துறைக்கு வந்தவாறு இருந்தன. இதையடுத்து, இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே போக்குவரத்து அமைப்பின் உறுப்பினர் முகமது ஜாம்ஷெட் கூறுகையில், “ரெயில்கள் தாமதம் குறித்த சரியான தகவல் கிடைப்பதில்லை. ஆனால், புதிதாக வரும் இந்த ஆப்ஸ் அனைத்துக்கும் தீர்வு கானும் வகையில் இருக்கும். ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள ஆப்ஸ், பயணிகளுக்கு தகவல் மட்டுமல்ல, ரெயில்களையும் கண்டுபிடிக்க முடியும் 

தற்போது, ரெயில்வே துறை சார்பில் ஏராளமான ஆப்ஸ்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.டிக்கெட் முன்பதிவு, முன்பதிவுசெய்யப்படாத டிக்கெட், கேட்டரிங், புகார்கள் என தனித்தனியாக செயலிகள் உள்ளன. அதை ஒருங்கிணைத்து இந்த ஆப்ஸ் இருக்கும் ’’ எனத் தெரிவித்தார்.

இந்த ஆப்ஸ்க்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதேசமயம், ஹிந்துரெயில்  என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுபோக, மெரிரெயில், இரெயில், மைரெயில், ரெயில் அனுபூட்டி ஆகிய பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.

click me!