2022 Maruti Suzuki Ertiga எக்கச்சக்க அப்டேட்கள்... ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் 2022 மாருதி சுசுகி அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Apr 17, 2022, 4:21 PM IST

2022 Maruti Suzuki Ertiga 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் தவணை முறையிலும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு காரை வாங்காமல் மாத சந்தா கட்டணம் செலுத்தி காரை பயன்படுத்தலாம்.


மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 எர்டிகா எம்.பி.வி. மாடலை ஒரு வழியாகஅறிமுகம் செய்து விட்டது. புதிய 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் விலை ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 

இந்திய சந்தையில் புதிய 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடலை வாங்காமல் பயன்படுத்த வழி செய்யும் வகையில் மாத தவணை முறையிலும் வழங்கப்படுகிறது. 2022 மாருதி சுசுகி எர்டிகா காருக்கான மாதாந்திர சந்தா கட்டணங்கள் பெட்ரோல் மாடலுக்கு ரூ. 18 ஆயிரத்து 600-இல் இருந்தும், CNG மாடலுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

நான்கு வேரியண்ட்கள்:

முந்தைய வழக்கப்படி 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடலும் தனிநபர் பயன்பாட்டுக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Lxi, Vxi, Zxi மற்றும் Zxi+ என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாருதி சுசுகி எர்டிகா மாடல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது. 2022 எர்டிகா மாடலின் Vxi மற்றும் Zxi வேரியண்ட்களில் ஃபேக்டரி ஃபிட் CNG கிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ஜின் விவரங்கள்:

2022 மாருதி சுசுகி எர்டிகா மாடலில் புது என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளது. இது புதிய மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கின்றன. மாருதி சுசுகி நிறுவனத்தின் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிடிற்கு மாற்றாக இம்முறை அதிநவீன 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த பெட்ரோல் என்ஜின் 102 பி.ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆர்க்டிக் வைட், பிரைம் ஆக்ஸ்ஃபோர்டு புளூ, சில்கி சில்வர் மற்றும் ஆபர்ன் ரெட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

விலை விவரங்கள்:

2022 மாருதி சுசுகி எர்டிகா LXi மாடல் ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா VXi மாடல் ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா VXi CNG மாடல் ரூ. 10 லட்சத்து 44 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா VXi மாடல் ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா ZXi மாடல் ரூ. 10 லட்சத்து 59 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா ZXi CNG மாடல் ரூ. 11 லட்சத்து 54 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா ZXi AT மாடல் ரூ. 12 லட்சத்து 09 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா ZXi+ மாடல் ரூ. 11 லட்சத்து 29 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா ZXi+ AT மாடல் ரூ. 12 லட்சத்து 79 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா டூர் M மாடல் ரூ. 9 லட்சத்து 46 ஆயிரம்
2022 மாருதி சுசுகி எர்டிகா டூர் M CNG மாடல் ரூ. 10 லட்சத்து 41 ஆயிரம்

click me!