5 ஆண்டுகளுக்கு முன்பு Netflix பதிவிட்ட ட்வீட் இப்போது வைரல்! காரணம் என்ன?

Published : Feb 04, 2023, 10:44 PM IST
5 ஆண்டுகளுக்கு முன்பு Netflix பதிவிட்ட ட்வீட் இப்போது வைரல்! காரணம் என்ன?

சுருக்கம்

நெட்ஃப்ளிக்ஸ்நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ஒரு ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. அது என்ன ட்வீட், இப்போது அது டிரெண்ட் ஆகுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.  

இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ்நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. அதற்கு முன்னதாகவே பல்வேறு நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் இருந்தாலும், இந்தியாவில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் இரு ஓடிடி தளங்களும் தற்போது போட்டிப் போட்டுக்கொண்டு சேவைகளை வழங்கி வருகின்றன. 

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பிரபலமாகும் காலக்கட்டத்தில் பிற ஓடிடி தளங்களில் இருந்து தனித்துவமான சேவைகளை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் மிக முக்கியமாக ‘பாஸ்வேர்டு ஷேரிங்’ என்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அதாவது, ஒரு பயனர் தனது நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்டின் யூசர் நேம், பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் நண்பர்களும் இலவசமாக நெட்ஃப்ளிக்ஸ் பார்க்கலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு, இன்று வரையில் அது நடைமுறையில் உள்ளது. 

அவ்வாறு பாஸ்வேர்டு ஷேரிங் திட்டத்தை கொண்டு வரும்போது, அதற்கு ஏற்றவாறு பல்வேறு வழிகளில் விளம்பரம் செய்தது. 2017 ஆம் ஆண்டு இது தொடர்பாக ஒரு ட்வீட் பதிவிட்டது. அதில், ‘அன்பின் அடையாளம் பாஸ்வேர்டை பகிர்வது’  என்பதை சுட்டி காட்டும் விதமாக ‘Love is sharing a password’ என்று பதிவிட்டது. 

தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்டு பகிர்தல் அம்சத்துக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், 2017 ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘Love is sharing a password’ ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. பலரும் அந்த ட்வீட்டுக்கு பதிலளித்து, நீங்களே இப்படி செய்யலாமா, பாஸ்வேர்டுக்கு கட்டணம் வசூலிக்கலாமா என்று கேள்வி எழுப்பியும், கிண்டல் செய்தும் வருகின்றனர்.

டுவிட்டரைப் போல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கும் விரைவில் கட்டணம்?

உலகளவில் கடுமையான பொருளாதார தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதால், பல பெருநிறுவனங்களில் ஊழியர்கள் குறைப்பு, ஊதியம் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் வருமானம் ஈட்டுவதற்காக பாஸ்வேர்டுக்கு கட்டண சந்தா முறை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?