ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ஜியோ 5ஜி கிடைக்கும் இடங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஏர்டெல் நிறுவனம் மிகவேகமாக 5ஜி அறிவித்து, பயனர்களை கவர்ந்து இழுத்தது. இருப்பினும், ஜியோ நிறுவனம் அதிகப்படியான பேண்ட்வித், டவர்களை கைப்பற்றியதால், ட்ரூ 5ஜி சேவையை கொண்டு வந்தது. ஒரு சில வாரங்களில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை சூடுபிடிக்கத் தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் சுமார் 29 மாநிலங்களில் உள்ள 225 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி வந்துவிட்டது.
4 பிப். 2023 தேதியின்படி, தமிழகத்தில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இடங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி. திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர்
மேலும், அடுத்த 6 மாதங்களுக்குள் 6 முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 10 அன்று பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தியது, பின்னர், குருகிராம், நொய்டா, காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த நாள் விரிவுபடுத்தியது.
5G நெட்வொர்க் மிகவும் சிறந்தது மற்றும் பயனர்களுக்கு 10 மடங்கு வேகமான இணைய வேகத்தை வழங்குகிறது. இருப்பினும், 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தியவர்கள் மொபைல் டேட்டா உடனடியாக தீர்ந்துவிடுவதாக கூறுகின்றனர்.உங்கள் ஸ்மார்ட்போனில் 5G பெற்று, அதைச் செயல்படுத்தினால், உங்கள் டேட்டா சற்றென்று முடிந்துவிடும். சிலர் நெட்வொர்க் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
moto e13 பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்! எவ்வளவு ரூபாய்?
நீங்கள் 5G ஐப் பயன்படுத்த திட்டமிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் டேட்டா இருக்காது. வெளியே இருக்கும்போது 5ஜி பயன்படுத்த வேண்டாம். ஹோட்டல்களில் பணம் செலுத்துவது முதல், டிக்கெட் முன்பதிவு செய்வது வரை, மொபைல் டேட்டா என்பது மிகவும் முக்கியமானது. எனவே, 5ஜி பயன்படுத்தினால், மொபைல் டேட்டா இல்லாமல் சிரமப்பட நேரிடும்.