WhatsApp செயலியில் வரப்போகும் வேற லெவல் அப்டேட். இனி 2ஜிபி வரை…

By Dinesh TG  |  First Published Feb 3, 2023, 9:43 PM IST

மெசேஜ்களை பின் செய்தல், 2ஜிபி ஃபைல்களை அனுப்புதல் என வாட்ஸ்அப்பில் மூன்று அட்டகாசமான அப்டேட்டுகள் வரவுள்ளன. இது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம். 


வாட்ஸ்அப்பில் கடந்த சில மாதங்களாக முழுவீச்சில் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது மூன்று விதமான அப்டேட்கள் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக வாட்ஸ்அப் பீட்டா  v2.23.3.13/15/17 தளத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, வாட்ஸ்அப்பில் இனி மெசேஜ்களை ‘பின்’ செய்யும் வசதி வரவுள்ளதாக தெரிகிறது. அதே போல், கால் ஷார்ட்கட்,  2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்புதல் அம்சங்களும் வரவுள்ளன. 

வாட்ஸ்அப் மெசேஜ்களை பின் செய்தல்:

Tap to resize

Latest Videos

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளை ‘பின்’ செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பதிவை முதல் இடத்தில் வைத்துக்கொள்ளலாம். இது நமக்கும் நமது தளத்திற்கு வரும் மற்ற பயனர்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் இருக்கும். 

தற்போது அதே போல் வாட்ஸ்அப்பிலும் மெசேஜ்களை ‘பின்’ செய்யும் வசதி வரவுள்ளது. நமக்குத் தேவையான, முக்கியமானது என்று நாம் கருதும் மெசேஜ்களை பின் செய்து வைத்துக் கொள்ளலாம். சுருக்கமாக சொல்லப்போனால், அந்த மெசேஜை ஒரு குறிப்பு போல் அப்படியே வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது அவ்வாறு பின் செய்யப்பட்ட மெசேஜை கிளிக் செய்து பார்க்கலாம்.

2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்பலாம்:

வாட்ஸ்அப்பில் இதுவரையில் வெறும் 16MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்பும்படியாக இருந்தது. எனவே, ஒரு ஃபைலை அவசரத்திற்கு அனுப்பும் போது, அது 16MB க்கு மேல் இருக்கும் போது அனுப்ப முடியாத சூழல் இருந்தது. இது பலருக்கும் ஏமாற்றத்தையும், எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக இருந்து வந்தது. 

இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் 2ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பலாம். அதற்கு ஏற்றாற் போல அப்டேட் வாட்ஸ்அப்பில் விரைவில் வரவுள்ளது. இவ்வாறு 2ஜிபி வரை அனுப்பலாம் என்ற தகவலானது குறிப்பிட்ட சில பீட்டா பயனர்களின் வாட்ஸ்அப் திரையில் ஏற்கனவே வந்த வண்ணம் உள்ளது. 

காலிங் ஷார்ட்கட்:

வாட்ஸ்அப் மூலமாக அடிக்கடி கால் செய்பவர்களுக்கு வசதியாக காலிங் ஷார்ட்கட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரே நபருக்கு அடிக்கடி கால் செய்ய வேண்டுமென்றால், இனி ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப்புக்கு சென்று, கால் மெனுவுக்கு செல்ல வேண்டியதில்லை. 

குறிப்பிட்ட அந்த நபரை கால் ஷார்ட்கட்டாக ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனிலேயே வைத்துக் கொள்ளலாம். இதனால், ஹோம் ஸ்கிரீனில் சம்பந்தப்பட்ட நபரின் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்தாலே நேரடியாக கால் செய்யப்படும். 
 

click me!