விண்வெளி நிகழ்வுகள் முதல் அனிமேஷன் தொடர் வரை... இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் நாசா டிவி!

By SG Balan  |  First Published Nov 9, 2023, 11:24 PM IST

நாசா தனது NASA+ சேவை மூலம் விளம்பரம் இல்லாத வீடியோ சேவையை வழங்கினாலும், சந்தா கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை இல்லை. இந்த ஸ்ட்ரீமிங் சேவையில் புதிய தொடர்கள் உட்பட பல வீடியோக்களை பார்வையிட்டு மகிழலாம்.


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) கட்டணமில்லாமல் NASA+ வீடியோ ஆன் டிமாண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் நேரடி ஒளிபரப்பு மற்றும் வீடியோ தொடர்களைக் கொண்ட ஸ்ட்ரீமிங் சேவையை கட்டணமில்லாமல் வழங்குவதாக அறிவித்துள்ளது.

நாசா தனது மொபைல் அப்ளிகேஷனையும் இணையதளத்தையும் புதுப்பித்துள்ளது. இரண்டிலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது. நாசா குறித்த செய்திகளும் இடம்பெறும்.

Tap to resize

Latest Videos

புதிய ஆன்-டிமாண்ட் ஸ்ட்ரீமிங் சேவையானது iOS மற்றும் ஆண்டிராய்டு மொபைல் அப்ளிகேஷன்களில் பார்க்க முடியும். மீடியா பிளேயர்களான ரோகூ (Roku) மற்றும் ஆப்பிள் டிவி உள்ளிட்டவற்றிலும் நாசா ஆப் மூலம் பார்க்கலாம்.

கூகுள் பிக்ஸல் மொபைல் ஏன்டா வாங்கினோம்னு கவலைப்படுறீங்களா? ஈசியான தீர்வு இதுதான்!

நாசாவின் துணை நிர்வாகி பாம் மெல்ராய் கூறுகையில், "நாசா, மக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பார்த்து மகிழும் வீடியோ நிகழ்ச்சிகளை வழங்குவதில் உத்வேகத்துடன் இயங்கி வருகிறது" என்கிறார். "சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நாசா இணையதளம், நாசா பிளஸ் (NASA+) சேவை மற்றும் புதுப்பிக்கப்பட்ட நாசா செயலி என முப்பெரும் சக்திவாய்ந்த சேவைகளை உருவாக்கி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பல நல்ல காட்சிகளைக் காண்பிக்கும்" என்றார்.

நாசா இந்த ஆண்டின் தொடக்கத்தில், nasa.gov மற்றும் science.nasa.gov வலைத்தளங்களைப் புதுப்பித்தது. அதில் பயனர்கள் ஆராய்ச்சி, காலநிலை மற்றும் ஆர்ட்டெமிஸ் தொடர்பான தகவல்கள் பலவற்றைக் காணலாம்.

நாசா தனது NASA+ சேவை மூலம் விளம்பரம் இல்லாத வீடியோ சேவையை வழங்கினாலும், சந்தா கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை இல்லை. இந்த ஸ்ட்ரீமிங் சேவையில் புதிய தொடர்கள் உட்பட பல வீடியோக்களை பார்வையிட்டு மகிழலாம்.

உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கி நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி காணும் ஒவ்வொரு படத்தையும் பதிவு செய்யும் ஆவணப்படத் தொடரையும் பார்க்கலாம். குழந்தைகள் கிரகங்கள், பிரபஞ்சத்தின் மர்மங்கள் பற்றி அறிந்துகொள்ள அனிமேஷன் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். நாசா விண்வெளி வீரர்களின் தனிப்பட்ட அனுபவக் கதைகளைச் சொல்லும் தொடரும் நாசா பிளஸ் சேவையில் பார்க்கக் கிடைக்கும்.

இந்தியாவுக்கு வருகிறது ஈ-ஏர் டாக்ஸி! டிராபிக் ஜாமுக்கு இதுதான் தீர்வு! 90 நிமிட பயணம் இனி 7 நிமிடத்தில்!

click me!