கூகுள் பிக்ஸல் மொபைல் ஏன்டா வாங்கினோம்னு கவலைப்படுறீங்களா? ஈசியான தீர்வு இதுதான்!

By SG Balan  |  First Published Nov 8, 2023, 6:41 PM IST

கூகிள் நிறுவனம் புதிய OTA  அப்டேட் ஒன்றை அளித்து பயனர்கள் எதிர்கொள்ளும் சில சிக்கல்களைத் தீர்த்து வைக்க வழி செய்துள்ளது.


கூகுள் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் ஆகியவை அக்டோபர் 2023 இல் நடந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் மொபைல் போனை வாங்கிய உடனேயே, பல பயனர்கள் தங்கள் போனில் பல சிக்கல்கள் இருப்பதாகப் புகாரளித்தனர்.

பழைய பிக்சல் மொபைல்களிலும் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் செய்த பின்பு பல்வேறு கோளாறுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. ஆண்டிராய்டு 14 அப்டேட்டுக்க்குப் பிறகு மொபைல் அதிகமாக ஹீட் ஆகிறது, மொபைல் நெட்வொர் இணைப்பு மோசமாக இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் பல பயனர்கள் புகார் கூறினர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கூகிள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அளித்து பயனர்கள் எதிர்கொள்ளும் சில சிக்கல்களைத் தீர்த்து வைக்க வழி செய்துள்ளது. பிக்சல் மொபைலை பயன்படுத்துபவர்களுக்கு புதிய OTA அப்பேட் வெளியாகியுள்ளது.

133 லேப்டாப்களைத் திருடிய ஹை-டெக் திருடன்! வலைவீசி சிக்க வைத்த பெங்களூரு போலீஸ்!

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்ட பிக்சல் மொபைல் வைத்திருக்கும் அனைத்து பயனர்களுக்கும் சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும். அப்டேட் பற்றிய நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்றால், Settings பகுதியில் Software Update பகுதிக்குச் சென்று செக் செக் பண்ணலாம்.

புதிய OTA அப்டேட் மூலம் என்னென் பிரச்சினை எல்லாம் சரியாகும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் பிக்சல் 7 ப்ரோவில் ஸ்கீன் ஆஃப் செய்திருக்கும்போது பச்சை நிற ஃபிளாஷ் தோன்றுவதை சரிசெய்யப்படும். ஏதாவது அப்ளிகேஷனலை Uninstall செய்ய முயற்சி செய்யும்போது "system instability" பிரச்சினை வராது.

பிக்சல் 6, பிக்சல் 6A, பிக்சல் 6 ப்ரோ, பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் 7A, பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ ஆகியவற்றில் Reboot loop பிரச்சினை OTA அப்டேட்டுக்குப் பின் இருக்காது. போன் Unlock செய்தபின் ஐகான்கள் மறைந்துவிடும் கோளாறும் ஏற்படாது. பிக்சல் 8 சீரிஸ் போன்களில் இருந்த ஸ்கிரீன் ஜர்க் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும்.

வாட்ஸ்அப்பில் ஈமெயில் வெரிஃபிகேஷன் வசதி அறிமுகம்! இனி மொபைர் நம்பர் தேவையில்ல!

click me!