ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளில் ஒன்றான HEL1OS என்ற எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அக்டோபர் 29, 2023 அன்று சூரிய எரிப்பு கதிர்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய லாக்ரேஞ்ச் புள்ளியை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அதன் சூரிய ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க புதிய தகவலை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளில் ஒன்றான HEL1OS என்ற எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அக்டோபர் 29, 2023 அன்று சூரிய எரிப்பு கதிர்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது.
வாட்ஸ்அப்பில் ஈமெயில் வெரிஃபிகேஷன் வசதி அறிமுகம்! இனி மொபைர் நம்பர் தேவையில்ல!
Aditya-L1 Mission:
HEL1OS captures first High-Energy X-ray glimpse of Solar Flares
🔸During its first observation period from approximately 12:00 to 22:00 UT on October 29, 2023, the High Energy L1 Orbiting X-ray Spectrometer (HEL1OS) on board Aditya-L1 has recorded the… pic.twitter.com/X6R9zhdwM5
சூரியனின் மேற்பரப்பு மற்றும் வெளிப்புற வளிமண்டலத்தில் திடீர் வெடிப்பு ஏற்பட்டு தோன்றும் ஆற்றல் மற்றும் கதிர்வீச்சு சூரிய எரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதிர்வீச்சு பொதுவாக எக்ஸ்-ரே மற்றும் புறஊதா (UV) கதிர்களின் வடிவத்தில் தோன்றும். சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள காந்த ஆற்றலின் வெளியீட்டால் இதுபோன்ற சூரிய எரிப்பு ஏற்படுகிறது.
செப்டம்பர் 2, 2023 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியின் காலநிலையில் அதன் தாக்கம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.
நம்பரை மாற்றினால் வாட்ஸ்அப் பிரைவசி கேள்விக்குறி? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு