வாட்ஸ்அப்பில் ஈமெயில் வெரிஃபிகேஷன் வசதி அறிமுகம்! இனி மொபைர் நம்பர் தேவையில்ல!

By SG Balan  |  First Published Nov 7, 2023, 6:38 PM IST

​​பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி வாட்ஸ்அப்பில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் ஈமெயில் முகவரியை வேறு யாரும் அறிய முடியாது என்று வாட்ஸ்அப் உறுதி அளிக்கிறது.


மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய பிரைவசி அம்சங்களைச் சேர்த்து வருகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை என்கிரிப்ட் செய்யும் அம்சம் பயன்பாட்டில் உள்ளது. இத்துடன் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறது.

சமீபத்தில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் பாஸ் கீ வசதியை அறிமுகப்படுத்தியது. இப்போது, ​வாட்ஸ்அப் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெரிஃபிகேஷன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டில், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது.

Latest Videos

undefined

இன்ஸ்டாகிராம் மூலம் கிரியேட்டர்கள் இனி ஈஸியா சம்பாதிக்கலாம்.. மெட்டா கொடுத்த குட் நியூஸ்..

WABetaInfo அளிக்கும் தகவலின்படி, இந்த அம்சம் இப்போது ஆண்டிராய்டு மொபைல்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் கிடைக்கும். Settings பகுதியில் உள்ள Account பிரிவில் இந்த அம்சம் இருப்பதைப் பார்க்கலாம். இந்த வசதி விரைவில் எல்லா பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய சரிபார்ப்பு முறை தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. இருப்பினும், அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் பரவலாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப்பில் பயனரின் அடையாளத்தைச் சரிபார்க்க மொபைல் எண் முதல் வழியாக இருக்கும், நிலையில், அதற்கு மாற்றாக மின்னஞ்சல் மூலம் சரிபார்க்கும் வசதி வந்திருக்கிறது.

இந்த அம்சத்தை பயன்படுத்த, ​​பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி வாட்ஸ்அப்பில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் ஈமெயில் முகவரியை வேறு யாரும் அறிய முடியாது என்று வாட்ஸ்அப் உறுதி அளிக்கிறது.

இருந்தாலும், இந்த மின்னஞ்சல் சரிபார்ப்பு அம்சம் வாட்ஸ்அப்பில் முதன்மையான வெரிஃபிகேஷன் முறையாக இருக்காது. இது வாட்ஸ்அப் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான கூடுதல் அம்சம் மட்டுமே. பயனரின் தொலைபேசி தொலைந்து போனாலோ, திருடு போனாலோ இந்த ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் கைகொடுக்கும்.

நம்பரை மாற்றினால் வாட்ஸ்அப் பிரைவசி கேள்விக்குறி? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

click me!