இதை செய்தால் 4 ஜிபி டேட்டாவை இலவசமாக பெறலாம்.. தீபாவளிக்கு செம ஆஃபரை வழங்கிய BSNL..!

By Ramya s  |  First Published Nov 7, 2023, 2:55 PM IST

தங்கள் பழைய சிம்மை 4ஜி தரத்திற்கு மேம்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டா இலவசம் என்ற அறிவிப்பை BSNL வெளியிட்டுள்ளது.


பண்டிகை காலம் என்பதால் நாட்டின் பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு போட்டிப்போட்டு கொண்டு பல ஆஃபர்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனமும் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகிறது. அந்த ஒரு சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு 3 ஜிபி டேட்டா இலவம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒரு புதிய சலுகையை BSNL நிறுவனம் வழங்கி உள்ளது. அதன்படி தங்கள் பழைய சிம்மை 4ஜி தரத்திற்கு மேம்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டா இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த திட்டம் ஆந்திர பிரதேச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் இதுகுறித்து ஆந்திரப்பிரதேச மண்டல BSNL தனது- அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ பயனர்கள் தங்கள் பழைய 2G/3G சிம்மை 4ஜி சிம்-ஆக மேம்படுத்தி, 4ஜிபி இலவச டேட்டாவைப் பெறலாம்.  இது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

4ஜி சிம்-க்கு மேம்படுத்தப்பட்டதும், வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் , BSNL-ன் அதிவேக நெட்வொர்க்கில் இந்தத் தரவை அனுபவிக்க முடியும். 4ஜி சிம்மிற்கு மேம்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையம், உரிமையாளர், சில்லறை விற்பனையாளர் மையம் ஆகியவற்றைப் பார்வையிடலாம் என்று BSNL தெரிவித்துள்ளது.

ஆந்திரப்பிரதேச BSNL பயனர்கள் தங்கள் சிம் கார்டு வகையைச் சரிபார்க்க 54040 என்ற எண்ணிற்கு 'SIM' என்ற செய்தியுடன் SMS அனுப்பலாம். வாடிக்கையாளர்கள் 3G ஐக் குறிக்கும் பதில் SMS ஐப் பெற்றால், அவர்கள்ள் தங்கள் சிம்மை 4G க்கு இலவசமாக மேம்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . முன்னதாக வெளியிடப்பட்ட தொலைத்தொடர்புத் துறை (DoT) வழிகாட்டுதல்களின்படி, KYC இன் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப, BSNL பயனர்கள் தங்கள் சிம் கார்டுகளை 4G க்கு மேம்படுத்த சில காலமாக ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஜிபி கூடுதல் டேட்டா.. அன்லிமிடெட் ஆஃபர் இத்தனை நாளைக்கா.. பிஎஸ்என்எல் தீபாவளி சலுகை..

இதனிடையே BSNL இந்தியாவில் பெரிய அளவிலான 4G உள்கட்டமைப்பை தீபாவளி முதல் தொடங்கும் என்று மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பரில், நெட்வொர்க்குகள் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்திய மொபைல் காங்கிரஸில், பிஎஸ்என்எல் தலைவர் பி கே புர்வார் நிறுவனம் டிசம்பரில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, ஜூன் 2024க்குள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் என்று கூறினார். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு 5ஜி மேம்படுத்தல்கள் நடைபெறும் என்று தலைவர் கூறினார்.

click me!