சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வந்த மகாதேவ் புக் என்ற சூதாட்ட செயலிக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாதேவ் புக் உள்ளிட்ட 22 சட்டவிரோத சூதாட்டச் செயலிகள் மற்றும் இணையதளங்களைத் தடை செய்வதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு மகாதேவ் புக்கிங் செயலி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வந்த மகாதேவ் புக் என்ற சூதாட்ட செயலிக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாதேவ் செயலியின் உரிமையாளர்கள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். விசாரணையின்போது, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், மகாதேவ் செயலி விளம்பரதாரர்கள் அவருக்கு ரூ.508 கோடி வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
10வது படித்திருந்தால் போதும்... MBC பிரிவினருக்கு சென்னையிலேயே அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!
நவம்பர் 2ஆம் தேதி சத்தீஸ்கரின் துர்க்கில் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு மக்களைக் கொள்ளையடிக்கும் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் ‘மகாதேவ்’ என்ற பெயரைக்கூட விட்டுவைக்கவில்லை” என்று சாடினார்.
இதற்கு நவம்பர் 4ஆம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசியபோது பதில் கூறிய முதல்வர் பூபேஷ் பாகல், மகாதேவ் செயலியை மூட பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"ஏன் மகாதேவ் ஆப் தடைசெய்யப்படவில்லை? அதைச் செய்யவேண்டியது மத்திய அரசின் கடமை தானே. நான் பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன், உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன டீலிங் இருக்கிறது என்று சொல்லுங்கள். அப்படி ஏதும் ஒப்பந்தம் இல்லை என்றால், நீங்களே ஏன் அந்தச் செயலியைத் தடை செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
நாகா மக்களை இழிவுபடுத்தும் திமுக... ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்