
AI பாதுகாப்பு உச்சி மாநாட்டில் (AI Safety Summit), இந்தியா சார்பில் கலந்து கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உலகின் பெரும்பணக்காரரும், டெஸ்லா நிறுவனரும், X தளத்தின் சி.இ.ஓ.வுமான எலான் மஸ்க் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் போது எலான் மஸ்கை ராஜீவ் சந்திரசேகர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தனக்கும் ஷிவோன் ஜிலிஸுகு பிறந்த மகனுக்கு சந்திரசேகர் என்ற நடுப்பெயர் உள்ளதாக எலாம் மஸ்க் கூறியதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர். "UK, Bletchley Park இல் நடந்த AI பாதுகாப்பு உச்சிமாநாட்டில் நான் யாரை சந்தித்தேன் என்று பாருங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த சந்திப்பின் போது எலான் மஸ்க் உடனான தனது படத்தையும் ராஜீவ் சந்திரசேகர் பகிரிந்துள்ளார். அவரின் பதிவில் " ஷிவோ ஜிலிஸுடன் பிறந்த தனது மகனுக்கு 'சந்திரசேகர்' என்று பெயர் வைத்திருப்பதாக எலான் மஸ்க் பகிர்ந்து கொண்டார்.
1983-ம் ஆண்டு இயற்பியலாளர் பேராசிரியர் எஸ் சுப்ரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றதால் அவரின் நினைவாக தனது மகனின் பெயரில் சந்திரசேகர் பெயரை சேர்த்ததாகவும் எலான் மஸ்க் தெரிவித்தாக அமைச்சர் பகிர்ந்துள்ளார். நட்சத்திரங்களின் கட்டமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் செயல்முறைகள் பற்றிய தத்துவார்த்த ஆய்வுகளுக்காக இந்திய வானியற்பியல் விஞ்ஞானி இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராஜீவ் சந்திரசேகரின் பதிவுக்கு ஷிவோன் ஜிலிஸ் பதிலளித்துள்லார். அவரின் பதிவில் “ ஆம்.. உண்மைதான். நாங்கள் எங்கள் மகனை சுருக்கமாக சேகர் என்று அழைக்கிறோம், ஆனால் புகழ்பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்
இரண்டாம் உலகத்தின் போது புகழ்பெற்ற பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் குழு புதிர் குறியீட்டை உடைத்த நவீன கம்ப்யூட்டிங்கின் தாயகமான பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பூங்காவில் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளுடன் சந்திரசேகர் கலந்துகொண்டார். , AI மற்றும் அறிவுசார் சொத்துக்கான இங்கிலாந்து அமைச்சர் ஜொனாதன் காம்ரோஸ் மற்றும் தொழில்துறை மற்றும் அறிவியல் துறைக்கான ஆஸ்திரேலிய அமைச்சர் எட் ஹுசிக் உட்பட தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார்.
தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த முடிவை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் விட்டுவிடக் கூடாது என்றும், இணையத்தில் உள்ள பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக அரசாங்கங்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் மற்றும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் கட்டமைப்பை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவின் திறமைக் குழுவில் இந்திய புலம்பெயர்ந்தோர் எவ்வாறு கணிசமான அளவில் சேர்கின்றனர் என்பது குறித்தும், தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டாண்மையின் சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இரண்டு நாள் உச்சிமாநாட்டின் முதல் நாளான புதன்கிழமை, பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக புதுமையான தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் பார்வையை முன்வைக்க சந்திரசேகர் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றினார்.
2-ம் நாளான நேற்று ரிஷி சுனக் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் "இங்கிலாந்து தலைமையிலான முதல் உலகளாவிய AI பாதுகாப்பு உச்சி மாநாடு ஏற்கனவே முக்கிய AI சக்திகள் மைல்கல் பிளெட்ச்லி பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது, அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான பகிரப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டது AI பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் அவசரமாக ஒன்றாக வேலை செய்கிறது. இங்கிலாந்து AI பாதுகாப்பு குறித்த இந்த உலகளாவிய உரையாடலுக்கு வழிவகுத்தது, ஆனால் எந்த ஒரு நாடும் தனியாக அபாயங்களை சமாளிக்க முடியாது," என்று கூறினார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.