Motorola Frontier 22 :  200MP பிரைமரி கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

By Kevin Kaarki  |  First Published Jan 27, 2022, 12:46 PM IST

மோட்டோரோலா நிறுவனம் ஃபிராண்டியர் 22 பெயரில் புதிதாக ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.


மோட்டோரோலா நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஃபிராண்டியர் 22 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மோட்டோரோலா தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ரெண்டர்களின் படி புது மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

புதிய மோட்டோரோலா ஃபிராண்டியர் 22 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 144Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 4500mAh பேட்டரி, 125 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 

Latest Videos

undefined

ஜெர்மன் நாட்டை சேர்ந்த வின்பியூச்சர் டி.இ. வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள்,  எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், HDR+ வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் SM8475 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 8GB ரேம் + 128GB மெமரி, 8GB ரேம் + 256GB மெமரி மற்றும் 12GB ரேம் + 256GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா சென்சார், 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP டெலிபோட்டோ லென்ஸ், 60MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை 6, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், என்.எப்.சி., ஜி.பி.எஸ்., ப்ளூடூத் 5.2 வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்படுகிறது.

click me!