விரைவில் இந்தியா வரும் போக்கோ X4 5ஜி

Nandhini Subramanian   | Asianet News
Published : Jan 26, 2022, 05:56 PM IST
விரைவில் இந்தியா வரும் போக்கோ X4 5ஜி

சுருக்கம்

போக்கோ  பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போக்கோ பிராண்டு விரைவில் தனது X4 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், X4 சீரிஸ் ஸ்மார்ட்போன் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலேசிய தளத்தில் இடம்பெற்று இருக்கும் ஸ்மார்ட்போன் போக்கோ X4 5ஜி என கூறப்படுகிறது.

இதே ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். எனப்படும் இந்திய சான்றளிக்கும் வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. எனினும், புதிய X4 சீரிஸ் மாடல்கள் பற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. மலேசிய தளத்தில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 2201116PG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என வலைதளத்தில் இருந்து தெரியவந்துள்ளது. அதன்படி போக்கோ X4 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் போக்கோ M4 ப்ரோ 5ஜி பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 

அந்த வரிசையில் தற்போது போக்கோ X4 5ஜி மாடல் இணையும் என தெரிகிறது. விரைவில் ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய போக்கோ X4 5ஜி அறிமுகம் பற்றிய விவரங்கள் இந்த நிகழ்வில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 6.67  இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!