60MP செல்ஃபி கேமராவுடன் மோட்டோ ஃபிளாக்‌ஷிப் போன் அறிமுகம் - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

By Kevin Kaarki  |  First Published Feb 25, 2022, 12:13 PM IST

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எட்ஜ் 30 ப்ரோ ஃபிளக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் X30 மாடலின் சர்வதேச எடிஷன் ஆகும். புதிய மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் OLED, 10-பிட கலர் ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் 60MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4800mAh பேட்டரி மற்றும் 68 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ அம்சங்கள்

- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+, 10-பிட் கலர் 
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் 
- அட்ரினோ next-gen GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB UFS 3.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.88, OV50A40 சென்சார், OIS
- 50MP 114° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, S5KJN1SQ03 சென்சார், 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
- 2MP டெப்த் சென்சார், f/2.4, OV02B1B சென்சார்
- 60MP செல்ஃபி கேமரா, f/2.2, OV60A40 சென்சார்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4800mAh பேட்டரி
- 68 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
- 5 வாட் ரிவர்ஸ் பவர் ஷேர்

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் காஸ்மோஸ் புளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 49,999 ஆகும். விற்பனை மார்ச் 4 ஆம் தேதி ப்ளிப்கார்ட் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான ஜியோ சலுகைகள், வட்டியில்லா மாத தவணை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

click me!