மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ E13 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதன் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நம்பர் ஒன் இடத்தில் மோட்டோரோலா நிறுவனம் இருந்து வருகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கேமராவின் தரம் குறைவாக இருந்தாலும், ஸ்டாக் ஆண்ட்ராய்டு, அதிகமான 5ஜி பேண்டுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தரத்துடன் உள்ளன. இதனால் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பிரியர்கள் வேறு ஸ்மார்ட்போன்களை திரும்பி பார்ப்பதில்லை.
தற்போது மோட்டோரோலா நிறுவனம் அடுத்தபடியாக E சீரிஸில் மோட்டோ E13 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. வரும் பிப்வரி மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மோட்டோ E13 ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்கள் சில தளங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி, மோட்டோ E 13 என்பது ஒரே வேரியண்டில் ஒரே ஒரு மாடலில் அதாவது 4GB + 64GB என்ற மாடலில் மட்டும் வருவதாக கூறப்படுகிறது.. இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.10,000க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தகவல்கள் வந்துள்ளன.
மோட்டோரோலாவின் E சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய மாடலானதுஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. இது விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, கீக்பெஞ்சில் தளத்தில் இந்த போன் காணப்பட்டது, அதில் இருந்து பார்க்கும் போது மூன்று வண்ண நிறங்களில் மோட்டோ E13 வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Moto E13 விலை, விற்பனை விவரங்கள்:
Moto E13 ஸ்மார்ட்போனானது ஏற்கெனவே குறிப்பிட்ட சில நாடுகளில் வந்துவிட்டது. அதன் விலை 119.99 யூரோக்கள் (தோராயமாக ரூ. 10,600) என்று தெரிகிறது. ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மோட்டோரோலா இணையதளம் மூலம் இதை வாங்கலாம். Moto E13க்கு மூன்று வண்ண நிறங்களில் உள்ளன: காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் க்ரீமி ஒயிட்.
Trichy Talents: பல்வேறு வசதிகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு செயலி உருவாக்கம்!
Moto E13 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
Moto E13 ஸ்மார்ட்போனில் இரண்டு டூயல் சிம் ஸ்லாட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் நானோ சிம்மை போட்டுக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 13 (கோ பதிப்பு, 20:9 விகிதம், HD+ (720x1,600) 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 60Hz ரெப்ரெஷ் ரேட், 269ppi பிக்சல் டென்சிட்டி ஆகியவை உள்ளன. Mali-G57 MP1 GPU, Unisoc T606 SoC பிராசசர் மற்றும் 2GB ரேம் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையாக மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 5MP முன்பக்க கேமரா, கேமரா உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம், Moto E13 மெமரியை 64ஜிபியில் இருந்து 1TB ஆக அதிகரிக்கும் வசதி உள்ளது.