
அனைவருக்கும் இன்டர்நெட் பயன்பாடு பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்த இணையச் சமநிலை நாளில் அதற்காக ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "இன்று நெட் நியூட்ராலிட்டி தினம். இந்தியாவில், டிஜிட்டல் நாகரித்தை ஆதரிப்பவர்களும், நான் உள்ளிட்ட எம்.பி.க்களும் இணைய சமநிலை பரிந்துரைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உடன் கடுமையாகப் போராடினோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "பெரிய நிறுவனங்களின் அழுத்தங்களைப் புறந்தள்ளிவிட்டு கோடிக்கணக்கான இணைய பயனர்களின் விருப்பத்திற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!
2015ஆம் ஆண்டு 2.85 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெட் நியூட்ராலிட்டி கொள்கைக்கு ஆதரவான கடிதத்தில் கையெழுத்திட்டனர். நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நெட் நியூட்ராலிட்டி கொள்கைகளை மீறுவதைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதன் எதிரொலியாக 2015ஆம் ஆண்டு மே மாதம் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் குழு இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிராய் இணைய பயன்பாடு தொடர்பான பாகுபாடுகளை தடை செய்யும் நெறிமுறைகளை அறிவித்தது. பேஸ்புக்கின் ப்ரீ பேசிக்ஸ் (Facebook Free Basics), ஏர்டெல் ஜீரோ (Airtel Zero) போன்ற திட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணைய சமநிலை (Net Neutrality) தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும் இணைய சேவை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அறிவித்தது.
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.