மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப், யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் 2C பெயரில் புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது மைக்ரோமேக்ஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த இன் 2b ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான லேண்டிங் பேஜ் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப், யுனிசாக் T610 பிராசஸர், 5000mAh பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கும்.
undefined
மைக்ரோமேக்ஸ் இன் 2C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.52 இன்ச் HD+ 720x1600 பிக்சல் LCD டிஸ்ப்ளே
- யுனிசாக் T610 பிராசஸர்
- 8MP பிரைமரி கேமரா
- VGA இரண்டாவது சென்சார்
- 5MP செல்ஃபி கேமரா
- 4GB / 6GB LPDDR4x ரேம்
- 64GB eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.
- யு.எஸ்.பி. சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக்
ரெண்டர்கள்:
சில தினங்களுக்கு முன் மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புது மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மாரட்போன் E6533 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். வலைதளம் மற்றும் கூகுள் பிளே சப்போர்ட் கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருந்தது.
ஏற்கனவே மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விட்டது. இந்த மாடலில் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, யுனிசாக் T610 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 64GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.