அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டண சந்தா அறிமுகம்!!

By Dhanalakshmi G  |  First Published Mar 18, 2023, 1:58 PM IST

அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் மெட்டா வெரிஃபைடு எனப்படும்  ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டண சந்தாவை கொண்டு வரப்பட்டுள்ளது.


கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் முதன்முதலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாவுக்கு ப்ளூ டிக் கட்டண சந்தா சேவை அறிமுகமானது. இதற்கு Meta Verified  என்று பெயரிடப்பட்டுள்ளது. 

பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை பெறுவதற்கு இது உதவின. இதற்கான மாதாந்திர கட்டணம் இணையதளத்திற்கு மாதம் 11.99 டாலர் என்றும், மொபைல் தளத்திற்கு மாதம் 14.99 டாலர் என்றும் நிர்ணயிக்கப்பட்டன. 

Latest Videos

undefined

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிலும் "Meta Verified இன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். இதுதொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "நீங்களும் ப்ளூ பேட்ஜ் பெறலாம். போலி கணக்கு பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வாடிக்கையாளர் உதவியை நேரடியாக பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 17ஆம் தேதி முதல், அதாவது நேற்று முதல் ப்ளூ டிக் பெறுவதற்கு பதிவு செய்யலாம். காத்திருப்பு பட்டியலில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தை தாண்டி, சில விதிகள் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் ChatGPT கட்டண சந்தா அறிமுகம்.. காசு கொடுக்குற அளவுக்கு வொர்த்தா?

அதன்படி, ப்ளூ டிக் பெறும் பயனர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போட்டோ ஐடியை வழங்க வேண்டும். Two Factor Authenticator எனப்படும் இரு காரணி அங்கீகாரமும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  

மெட்டாவால் சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்கள் தங்களது பெயர், புகைப்படம், பயனர் பெயர் அல்லது பிறந்த தேதியை மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் சரிபார்ப்பு செயல்முறையை தொடங்க வேண்டும்.

என்ன பலன்கள் கிடைக்கும்:

மெட்டா வெரிஃபைடு பெற்ற பயனர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக Facebook, Instagram ஸ்டோரிகள், Facebook Reels ஆகியவற்றில் பிரத்யேக ஸ்டிக்கர்களைப் பெறலாம். பேஸ்புக்கில் ஒரு மாதத்திற்கு 100 ஸ்டார்கள் பெறலாம். இதனால், அதை  மற்ற கிரியேட்டர்களுக்கு வழங்கி உங்கள் ஆதரவைக் காட்டலாம்.

இதற்கு முன்பு மெட்டா நிறுவனம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சோதனை முயற்சியாக கட்டண சந்தாவை கொண்டு வந்தது. அதற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டுவிட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கிலும் கட்டண சந்தா, பிரீமியம் சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மைக்ரோசாப்ட் வேர்டு, பவர்பாயிண்ட், எக்சல் மென்பொருட்களில் ChatGPT சேர்ப்பு!

click me!